வியாழன், 18 ஜனவரி, 2018

14 மகனை எரித்து கொன்ற தாய் ... கேரளாவில் சொத்து தகராறில் .. ஜெயாமோள்...

கேரளாவில் 14 வயது மகனை எரித்துக் கொன்ற தாய் கைதுமாலைமலர் :கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் சொத்து தகராறில் 14 வயது மகனை எரித்துக் கொன்ற தாயாரை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள குன்டாரா பகுதியை சேர்ந்த ஜித்து என்ற 14 வயது சிறுவன் கடந்த 14-ம் தேதி திடீரென்று காணாமல் போனான். இதுதொடர்பாக, அவனது தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தனது விட்டுக்கு அருகாமையில் எரிந்த கரிக்கட்டையாக பிணமாக கிடந்த சிறுவனின் உடலை போலீசார் நேற்று கண்டெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அந்த சிறுவனின் தாயார் ஜெயாமோள் அளித்த வாக்குமூலம் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால் போலீசார் சுமார் 44 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண்ணின்மீது சந்தேகப்பட்டனர். மேலும், அவரது கையிலும் தீக்காயம் இருந்ததால் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது, கணவரின் குடும்பத்தாருக்கு சொத்துகள் தொடர்பான வாக்குவாதத்தில் தனக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஜெயாமோள், பெற்ற மகன் என்றும் பாராமல் அவனை உயிரிடன் எரித்துக் கொன்றதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, ஜெயாமோளை கைதுசெய்த போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக