வெள்ளி, 12 ஜனவரி, 2018

உபியில் 10 மாதம், 921 என்கவுண்ட்டர்: கொலைகார யோகியின் கொடூர ஆட்சி

10 மாதம், 921 என்கவுண்ட்டர்:  யோகி சாதனை!
உத்திரப் பிரதேச மாநில பாஜக முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்த மார்ச் 19 ஆம் தேதி பதவியேற்றார். அவர் முதல்வர் பதவியேற்றதில் இருந்து கடந்த பத்து மாதங்களில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் 921 என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடந்திருக்கின்றன, இதில் 33 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சாமியார் என்று கருதப்படும் யோகி ஆதித்யநாத் உ.பி. மாநில முதல்வராகப் பதவியேற்ற 12ஆவது நாள் அதாவது கடந்த வருடம் மார்ச் சஹரன்பூர் என்ற இடத்தில் முதல் என்கவுண்டர் சம்பவம் நடந்தது. இதில் குர்மித் என்பவர் போலீசின் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாகிக் கொல்லப்பட்டார். கடைசியாக ஜனவரி 9ஆம் ஆம் தேதி ஆசம்கார் பகுதியில் என்கவுண்ட்டர் நடந்துள்ளது. யோகி ஆட்சியில் நடந்த 921ஆவது என்கவுண்ட்டர் சம்பவம் இது என்று ஆங்கிலப் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.

அதிக என்கவுண்ட்டர்கள் பற்றி கடந்த நவம்பர் மாதமே தேசிய மனித உரிமை ஆணையம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஆறு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை உ.பி. மாநில அரசு மறுத்திருக்கிறது. இதுவரை மாநில அரசுக்கு மனித உரிமை ஆணையத்தின் நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று மறுக்கிறார்கள் அதிகாரிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக