ஞாயிறு, 3 டிசம்பர், 2017

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பாஜக மோசடி: அகிலேஷ் குற்றச்சாட்டு

tamithehindu :;உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளது என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 16 மாநகராட்சிகளில் 14 மாநகராட்சிகளை பாஜக கைப்பற்றியது. இதுபோலவே, நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்டவற்றிலும் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், பாஜக முதலிடத்தையும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் 2-வது இடத்தையும் பிடித்தன. சமாஜ்வாதி, காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் உத்தரப் பிரதேச உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளதாவது:

‘‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளை செய்து இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மின்னணு இயந்திரங்கள் அல்லாமல் வாக்குப்பதிவு சீட்டை பயன்படுத்தி தேர்தல் நடந்த இடங்களில் பாஜக 15 சதவீத இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜகவின் தில்லுமுல்லு தெரிய வந்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக