ஞாயிறு, 10 டிசம்பர், 2017

ஜெயா CCTV மூர்ச்சையான நிலையில் நைட்டியோடு அம்புலன்ஸில் ஏற்றுவது பதிவு!!

டிசம்பர் 7, 1996 பகல் 12 மணி. பூட்ஸ் கால்கள் தட­த­டக்க போயஸ் கார்­ட­னுக்குள் நுழைந்த தமிழ்­நாடு லஞ்ச ஒழிப்புத் துறை, அடுத்த ஐந்து நாட்­களில் ஒரு கட்சித் தலை­மையின் விதி­யையே மாற்றும் சாட்­சி­யங்­களைக் கைப்­பற்­றி­யது.< சரி­யாக 21 வரு­டங்­க­ளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பூகம்­பத்தைச் சந்­தித்­துள்­ளது போயஸ் தோட்டக் கத­வுகள்.< கடந்த நவம்பர் 17 ஆம் திகதி இரவு 8.30 மணி­ய­ளவில் ஜெய­ல­லி­தாவின் உத­வி­யாளர் பூங்­குன்றன் இள­வ­ர­சியின் மகள் ஷகீலா சகிதம் போயஸ் கார்­ட­னுக்குள் நுழைந்த வரு­மான வரித்­துறை அதி­கா­ரிகள், பூங்­குன்றன் அறைக்குள் முதலில் சல்­லடை போட்­டனர்.< பின்னர் போயஸ் இல்­லத்தின் கீழ்த்­த­ளத்­தி­லுள்ள சசி­க­லாவின் அறை உட்­பட மூன்று அறை­களைச் சோத­னையால் துளைத்­தெ­டுத்­தனர். சசி­க­லாவின் அறையில் இருந்து தலா இரண்டு லேப்­டாப்­பு­களும் பென் டிரைவ்­களும் கைப்­பற்­றப்­பட்­டன. பூங்­குன்றன் அறை­யி­லி­ருந்து ஜெய­ல­லி­தா­விற்கு வந்­தி­ருந்த கடி­தங்­க­ளையும் வரு­மான வரித்­துறை கைப்­பற்­றி­யது.
இதற்­கெல்லாம் மேலாகச்  சோத­னையில் சிக்­கிய செப். 22 இரவு சீ.சீ.டி.வி. காட்­சி­கள்தான்  வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­களை வியர்க்க வைத்­து ­விட்டது.
அன்­றி­ரவு தான் மூர்ச்­சை­யான நிலையில் அப்­பல்லோ மருத்­து­வ­ம­னைக்கு ஜெய­ல­லிதா அம்­பு­லன்ஸில் அழைத்துச் செல்­லப்­பட்டார்.
போயஸ் தோட்­டத்தில் சோத­னையில் ஈடு­பட்ட வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­க­ளிடம் பேசினோம்.
நவம்பர் 9 ஆம் திகதி முதல் அடை­யா­ரி­லுள்ள பூங்­குன்­றனின் வீட்டில் நடை­பெற்ற வரு­மான வரிச்­சோ­த­னையில் பல்­வேறு முக்­கிய ஆவ­ணங்­களைக் கைப்­பற்­றினோம்.
குறிப்­பாக 2011 க்குப் பிறகு மரத்­தொ­ழிலில் பூங்­குன்றன் ஈடு­பட்டு வரு­வதும் சுமார் 100 கோடிக்கு பல்­வேறு முத­லீ­டுகள் செய்­தி­ருப்­பதும் எங்­க­ளது சோத­னையில் தெரி­ய­வந்­தது.
இது தொடர்­பாக அவ­ரிடம் நுங்­கம்­பாக்கம் வரு­மான வரி புல­னாய்வுப் பிரிவு அலு­வ­ல­கத்தில் விசா­ரித்து வந்தோம்.
பூங்­குன்­ற­னிடம் அவ­ரது சொத்­துக்­க­ணக்கு, முத­லீ­டுகள் தொடர்­பான கேள்­விகள் முன்­வைக்­கப்­பட்­டன. டிச. 16, 2011 இந்த ஒரே நாளில் மட்­டுமே, ஸ்ரீ ஹரி சந்­தனா எஸ்டேட்ஸ், ஸ்ரீ ஜெயா பைனான்ஸ் அண்ட் இன்­வெஸ்ட்மென்ட்ஸ், ஜாஸ் சினிமாஸ் உட்­பட ஒன்­பது நிறுவனங்­க­ளுக்கு இயக்­கு­ந­ராகப் பொறுப்­பேற்­றுள்ளார்.
ஜாஸ் சினி­மாஸில் இருந்து தாம­த­மாக வில­கி­னாலும் மற்றப் பொறுப்­புகள் அனைத்­தையும் மார்ச் 4, 2013 இல் துறந்­துள்ளார்.
அதா­வது டிச 19, 2011 இல் சசி­கலா குடும்­பத்தை ஜெய­ல­லிதா விலக்கி வைப்­ப­தற்கு முன்­ன­தாக இந்த நிறு­வ­னங்கள் அனைத்­திலும் பூங்குன்றன் இயக்­கு­ந­ராக பொறுப்­பேற்­றுள்ளார்.
சசி­கலா மீண்டும் ஜெய­ல­லி­தா­வோடு இணைந்த பிறகு பொறுப்­பி­லி­ருந்து வில­கி­யுள்ளார். இதன் பின்­னணி குறித்து கேள்­விகள் கேட்­கப்­பட்­டன.
முதலில் முரண்டு பிடித்த பூங்­குன்­ற­னுக்கு நாங்கள் முன்­வைத்த ஆவ­ணங்­களைப் பார்த்­த­வுடன் அந்தப் புல் ஏ.சி.யிலும் வியர்த்துவிட்டது.
நாங்கள் எதிர்­பார்க்­காத ஒன்றை தானா­கவே கக்­கினார். கடந்த 2016 செப் 22 ஆம் திகதி இரவு போயஸ் கார்டன் இல்­லத்­தி­லி­ருந்து அப்­பல்­லோ­விற்கு ஜெய­ல­லிதா அழைத்துச் செல்­லப்­படும் சீ.சீ.டி.வி. காட்­சிகள் தன்­னிடம் இருப்­ப­தாகக் கூறினார்.
போயஸ் இல்­லத்தை அர­சு­ட­மை­யாக்கும் முடிவை எதிர்த்து தீபா தொடுத்த வழக்கு உயர் நீதி­மன்ற விசா­ர­ணையில் உள்­ளது.
இதனால் அங்கு சோத­னை­யிட நீதி­மன்ற உத்­த­ரவு அவ­சியம் என்­பதால் அவ­சர அவ­ச­ர­மாக உத்­த­ரவு பெறப்­பட்­டது.
அன்­றி­ரவு 8.20 மணிக்கு பூங்­குன்றன், ஷகீலா, அவ­ரது கணவர் ராஜராஜன் சகிதம் கூடுதல் இயக்­குநர் தலை­மையில் சுமார் 15 அதி­கா­ரிகள் போயஸ் கார்டன் சென்­ற­டைந்தோம்.
முதலில் அனு­மதி மறுத்த பொலிஸார் நீதி­மன்­றத்தின் உத்­த­ரவைக் காட்­டி­யதும் அனு­ம­தித்­தனர்.
போயஸ் இல்ல வளா­கத்­திற்குள் இருக் கும் தனி இரண்டு மாடி கட்­ட­டத்தில் தான் பூங்­குன்­றனின் அறை உள்­ளது. அதில் முதலில் சோத­னை­யிட்டோம்.
அவ­ரு­டைய கம்­பி­யூட்­ட­ரி­லி­ருந்த சீ.சீ.டி.வி. காட்­சி­களை ஆராய்ந்­ததில் செப் 22 ஆம் திகதி இரவு 9 மணி முதல் போயஸ் இல்லம் பரபரப்பாகக் காணப்­ப­டு­வதும் 10.06 மணிக்கு அப்­பல்லோ மருத்­து­வ­ம­னையின் அம்­புலன்ஸ் ஒன்று கார்­ட­னுக்குள் நுழை­வதும் பதிவாகியி­ருந்­தது.
10.13 மணிக்கு மூர்ச்­சை­யான நிலையில் நைட்­டி­யோடு ஜெய­ல­லிதா அம்­புலன்ஸ் வாக­னத்தில் ஏற்­றப்­ப­டு­வதும் பதி­வா­கி­யுள்­ளது.
இந்தக் காட்­சிகள் இருந்த கம்­பி­யூட்டர் ஹார்ட்டிஸ்க் உட்­பட அனைத்து எலெக்ட்­ரானிக் பொருட்­க­ளையும் கைப்­பற்­றினோம்.
இது போக சசி­கலா அறை­யிலும் பல்­வேறு ஆவ­ணங்­களும், பென்­டிரைவ், லேப்­டாப்­களும் சிக்­கி­யுள்­ளன. அவற்றின் மீதான ஆய்­வுகள் நடை­பெ­று­கி­றன.
தேவைப்­பட்டால் மீண்டும் போயஸ் இல்­லத்தில் சோத­னை­யி­டுவோம் என்­றனர்.
இந்த சீ.சீ.டி.வி. காட்­சிகள் ஒரு­பு­ற­மி­ருக்க, அ.தி.மு.க. வின் அறக்­கட்­ட­ளைகள் விவ­காரம் பூதா­க­ர­மா­கி­யுள்­ளது. அக்­கட்­சியின் சீனி­யர்கள் கூறு­கையில்; அ.தி.மு.க.விற்கு அண்ணா, டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என இரண்டு அறக்­கட்­ட­ளைகள் உள்­ளன.
ஒன்று எம்.ஜி.ஆர். தொடங்­கி­யது. மற்­றொன்று ஜெய­ல­லிதா தொடங்­கி­யது. இவற்­றிற்கு ஜெய­ல­லி­தாவும் பூங்­குன்­றனும் தான் நிர்வாகிகளாக இருந்­தனர்.
அவ்­வப்­போது கட்­சிக்கு வழங்­கப்­படும் நிதி­யி­லி­ருந்து ஒரு தொகையை இந்த அறக்­கட்­ட­ளை­களில் ஜெய­ல­லிதா செலுத்­தி­வந்தார். இதன் மூலம் வரு­டந்­தோறும் பல கோடி ரூபாய் அள­விற்கு இரு அறக்­கட்­ட­ளை­க­ளுக்கும் நிதி சேர்ந்­துள்­ளன.
கடந்த பல வரு­டங்­களில் அவ்­வப்­போது சிறு சிறு உத­விகள் செய்­ததைத் தவிர மீதி 40 முதல் 50 கோடிகள் ரூபாய் பணம் அப்­ப­டியே அறக்கட்­ட­ளையில் தான் உள்­ளது. ஜெய­ல­லிதா மறைந்த பிறகு இவ்­வி­ரண்டு அறக்­கட்­ட­ளை­களும் பூங்­குன்றன் வசம் வந்­தன.
இந்­நி­லையில் அக்­கு­டும்­பத்­தி­ன­ருக்கு பணம் முடக்கம் ஏற்­ப­டவே இவ்­வி­ரண்டு அறக்­கட்­ட­ளை­க­ளையும் முக்­கி­ய­மான நபர் பெயரில் மாற்­று­வ­தற்கு முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது.
இதற்­காக சசி­கலா பரோலில் வெளி­வந்த சம­யத்தில் பூங்­குன்­ற­னி­ட­மி­ருந்து சுமார் 20 வெற்றுப் பத்­தி­ரங்­களில் கையெ­ழுத்து வாங்­கி­ய­தாக சொல்­லப்­ப­டு­கி­றது.
இப்­பத்­தி­ரங்களை பதி­வு­செய்ய சென்­னை­யி­லுள்ள ஐந்து பத்­திரப் பதி­வா­ளர்­களை இரவில் அழைத்துப் பேசியபோதுதான் வருமான வரித்துறை மோப்பம் பிடித்துள் ளது. இதனை தொடர்ந்தே ரெய்டு காட்சிகள் அரங்கேறின. சசிகலா குடும்பத்திற்கு இனித் தொடர் சிக்கல்தான் என்றனர்.
சீ.சீ.டி.வி. காட்சிகளும் அறக்கட்டளை தொடர்பான ஆவணங்களும் தற்போது வருமான வரித்துறையின் வசம் இருப்பதால் அக்குடும்பம்தான் சப்த நாடியும் ஒடுங்கிப் போன நிலையில் உள்ளதாம்.
பூங்குன்றனை அப்ரூவராக்குவதற்கும் வருமான வரித் துறை முயற்சி மேற்கொள்கிறதாம்.
இத்தாக் குதல் இத்தோடு நிற்காது இனிவரும் நாட்களில் பல அதிரடிக் காட்சிகளும் திருப் பங்களும் அரங்கேறும் என்கிறது நுங்கம் பாக்கம் ஹைரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக