புதன், 6 டிசம்பர், 2017

இசையமைப்பாளர் ஆதித்தியன் காலமானார்

வெப்துனியா : பிரபல தமிழ் சினிமா இசையமைப்பாளர் ஆதித்யன் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். நடிகர் கார்த்திக் நடித்த அமரன் தொடங்கி, சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி வரை 25 படங்களுக்கும் மேல் இசையமைத்தவர் ஆதித்யன். இவர் இசையமைத்ததில் அமரன், சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட படங்களின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றன. அதன்பின் சினிமாவிலிருந்து ஒதுங்கி தொலைக்காட்சிகளில் சமையல் நிகழ்ச்சி செய்து கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் மீடியாக்களிலிருந்து ஒதுங்கி இருந்த அவர் உடல் நலக்குறைபாடு காரணமாக ஹைதராபாத்தில் இன்று காலமானார். இவருக்கு வயது 63. இவர் இசையமைப்பாளர் டி.இமானின் குரு என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக