வியாழன், 21 டிசம்பர், 2017

பாஜக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.. கபில் சிபல் சாட்டையடி


Our stand has been vindicated, it was a scam by Vinod Rai: Kapil Sibal post 2G verdict 2ஜி விவகாரத்தில் தொடர்ந்து ஊழல் ஊழல் என்று பேசி வந்த பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் கூறியுள்ளார். 2ஜி வழக்கு தீர்ப்புகுறித்து கபில் சிபல் செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது நிலைப்பாடு வென்றுள்ளது. வினோத் ராய் கற்பனையாக கூறிய கணக்கு பொய் என்று உறுதியாகியுள்ளது. நான் இது ஊழலே அல்ல என்று தொடர்ந்து கூறி வந்தேன்.
இது உண்மையில் முன்னாள் கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் செய்த ஊழல். அதைத்தான் தற்போதைய தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது. வினோத் ராயின் செயல்பாட்டால் தொலைத் தொடர்புத் துறையே சீரழிந்து போய் விட்டது.
வினோத் ராய் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு மத்திய அரசு கொடுத்த பதவி பறிக்கப்பட வேண்டும். பாஜக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் சிபல். tamiloneindia. sutha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக