ஞாயிறு, 10 டிசம்பர், 2017

கைகால்களில் விலங்கிடப்பட்ட தஷ்வந்த்: மூன்று நாள் போலீஸ் காவலில்.. இன்று சென்னைக்கு ..

tamilthehindu :தப்பி ஓடியதால் கைகால்களில் விலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட தாயாரைக் கொலை செய்து தலைமறைவான தஷ்வந்த் சென்னை அழைத்து வரப்படுவதற்காக மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சென்னை குன்றத்தூரில், சில மாதங்களுக்கு முன்னர் 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொன்று எரித்த வழக்கில் கைதானார் பக்கத்து வீட்டு வாலிபர் தஷ்வந்த்.< குண்டர்சட்டத்தில் அடைத்தாலும் போலீஸாரின் மெத்தனத்தால் விடுவிக்கப்பட்ட தஷ்வந்த் கடந்த சனிக்கிழமை தன்னைப் பெற்றத்தாயான சரளாவை கொடூரமாக கொலை செய்துவிட்டு 25 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கப்பணத்துடன் தப்பி மும்பை சென்றார். மூன்று நாட்களுக்கு முன்னர் ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான சென்னை தனிப்படை போலீஸார் மும்பையில் தஷ்வந்தை கைது செய்து மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சென்னை அழைத்துவரவிருந்த நிலையில், தங்கும் விடுதியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

அவரை தீவிரமாக தேடிய போலீஸார் மறுநாள் பிடித்தனர். அவரை தப்பிக்க விட்ட தமிழக போலீஸாரே மீண்டும் பிடித்தனர். இந்நிலையில் மீண்டும் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தஷ்வந்தை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து, சென்னை ஸ்ரீபெரும்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(12/12/17) ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டனர்.
இதையடுத்து இன்று இரவு தஷ்வந்தை போலீஸார் விமானம் மூலம் சென்னை அழைத்து வருகின்றனர். இன்று மும்பை நீதிமன்றத்தில் தஷ்வந்தை போலீஸார் அழைத்து வந்தபோது அவர் தப்பி விடாமல் இருக்க கைகால்களில் விலங்கிட்டு அழைத்து வந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக