tamiloneindia :: தெலுங்கு நடிகர் சோபன் பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பிறந்த மகள்தான் தற்போது உரிமை கோரும் அம்ருதா என ஜெயலலிதாவின் தோழி கீதா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா மறைந்த உடன் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்; அவரது மரணத்துக்கு நீதி தேவை என நீதிமன்ற கதவுகளைத் தட்டியவர் அவரது தோழி கீதா. ஜெயலலிதாவின் மரணத்துக்கு சசிகலா குடும்பம்தான் காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டி வருபவர் கீதா.
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்த மகள் நான்; ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என பெங்களூரு அம்ருதா உச்சநீதிமன்றத்துக்குப் போனார்.
அவரது கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய அறிவுறுத்தியது.
இதனிடையே ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா என்பவரும் சோபன்பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் குழந்தை பிறந்தது; ஜெயலலிதாவுக்கு பிரசவமே நாங்கள்தான் பார்த்தோம் என அதிரடியாக குண்டுகளை வீசினார்.
தற்போது அம்ருதாவை பாதுகாத்து வருவதும் ஜெயலலிதாவின் உறவினரான ரஞ்சனி ரவீந்தரன் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த களேபரங்களுக்கு மத்தியில் சன் நியூஸ் டிவி சேனலுக்கு பேட்டியளித்த ஜெயலலிதாவின் தோழி கீதா, சோபன்பாபுவுக்கும் ஜெயலலிதாவுக்கும் பிறந்த பெண்தான் அம்ருதா.
இது ஜெயலலிதாவுக்கும் தெரியும். சசிகலாவுக்கும் தெரியும்.
அம்ருதாவுக்கு போயஸ் கார்டனில் என்னவெல்லாம் நடந்தது என்பது டி.என்.ஏ. பரிசோதனைக்குப் பிறகுதான் தெரியவரும். டி.என்.ஏ. பரிசோதனையை அம்ருதாவுக்கு முதலில் நடத்துங்கள்..
அப்போதுதான் உண்மை தெரியவரும். அம்ருதாவைப் பொறுத்தவரையில் பணம், சொத்து எதற்கும் ஆசைப்படவில்லை.
ஜெயலலிதாவின் மகள் என்கிற உரிமையே போதும் என நினைக்கிறார். அம்ருதா சொல்வது உண்மை என நிரூபணம் ஆகும் நிலையில் தமிழக அரசியலில் பெரும் மாற்றமே வரும் என புதிய அணுகுண்டை வீசியுள்ளார் கீதா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக