வெள்ளி, 29 டிசம்பர், 2017

திமுக :முறையாக தேர்தல் பணி ஆற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை

தினத்தந்தி : சென்னை, பரபரப்பான அரசியல் சூழலில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை  நடைபெற்றது.  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற  இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள்  பங்கேற்றனர். இந்த செயல்திட்டக்குழு கூட்டத்தில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீரமானங்கள் பின்வருமாறு:- 1.புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு ரூ.13,520 கோடி வழங்க வேண்டும் என திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
2.பெரும்பான்மையை இழந்து அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணான அதிமுக அரசு ஜனநாயகத்திற்கு களங்கம் என திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

3. 2-ஜி எனும் மாயாவி காற்றில் கலந்த கற்பனை கணக்கு என திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். 
4. ஆர்.கே.நரில் நடைபெற்ற ஜனநாயக ப்டுகொலையை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தாக கண்டனம்.
5. ஆர்.கே.நகரில் முறையாக தேர்தல் பணி ஆற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை " இவ்வாறு ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக