திங்கள், 11 டிசம்பர், 2017

நடராஜன் : ஜெயாவுக்கு உதவி செய்து நாங்கள் பிரச்சனயில் சிக்கி கொண்டோம்.

வெப்துனியா :ஜெயலலிதாவிற்கு உதவி செய்து நாங்கள் பிரச்சனையில் சிக்கிக் கொண்டோம் என சசிகலாவின் கணவர் நடராஜன் பேட்டியளித்துள்ளார். உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன், சில நாட்களுக்கு முன்புதான் வீடு திரும்பினார். அதன் பின் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நடராஜன், சமீபத்தில் வானொலிக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது: ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிடுவது அவரின் சொந்த விருப்பம். அதற்கு சசிகலா அனுமதி அளித்தாரா என்பது எனக்கு தெரியாது. இப்போது மத்திய அரசு நடத்தும் வருமான வரி சோதனை, இதற்கு முன்பு நடக்கவில்லை என்பதை பார்க்க வேண்டும்.
அதுவும், பிரதமர் மோடி கருணாநிதியை சந்தித்து சென்ற பின் சோதனை நடந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நானும், என் மனைவியும் ஜெயலலிதாவிற்காக பல தியாகங்களை செய்துள்ளோம். ஒரு கட்டத்தில் நாங்கள் மட்டும் முடிவெடுத்திருந்தால் என்னென்னவோ ஆகியிருக்கும். ஆனால், நாங்கள் பொறுத்துக்கொண்டோம். ஆனால், அதற்கான பலனை ஜெயலலிதா எங்களுக்கு தரவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. உதவி செய்தவர்களுக்கு உபத்திரம் வந்ததென்றால் அது எங்கள் குடும்பத்திற்குதான்” என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக