வியாழன், 28 டிசம்பர், 2017

ரஜினியின் மனசாட்சிக்கு தெரியும்! கதிரேசன் தம்பதியின் உருக்கமான கடிதம்

நக்கீரன் : நடிகர் தனுஷை தங்களது மகன் என்று கூறிவரும் மேலூர் கதிரேசன் தம்பதியினர் நடிக தனுஷுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். பெற்றோராகிய தங்களை பார்க்க தனுஷை அனுப்பும்படி ரஜினிக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கதிரேசன் தம்பதியின் கடிதம்: ’’பாசமிகு உறவினர் சூப்பர்ஸ்டார் ரஜினி அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். தங்களுடைய விருப்பமாம் நமக்கு முக்கியம் நம்முடைய தாய், தந்தைதான் அவர்கள்தான் வாழும் தெய்வங்கள் நம் குடும்பம்தான் முக்கியம் என கூறிய தங்களை மனமார வாழ்த்துகிறேன். நம் குடும்ப உறவு மேம்பட நான் பெற்று வளர்த்த என் மகனும் தாங்கள் மருமகனுமாகிய கலைசெல்வன் என்ற தனுஷ் - ஐ தனது பெற்றோராகிய என்னையும், என் மனைவி மீனாட்சியையும் வந்து ஒருமுறை பார்த்து செல்ல அனுப்பும்படி அன்புடன் வேண்டுகிறேன். குடும்ப உறவு மேம்பட வாழ்த்துக்கள். - கதிரேசன் மீனாட்சி மேலூர் போஸ்ட் மதுரை மாவட்டம்’’ இது குறித்து கதிரேசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான் எந்து ரஜினியின் மனசாட்சிக்கு தெரியும். பெற்றோரான எங்களை கவனித்துக்கொள்ள தனுஷுக்கு அறிவுறை வழங்கி அனுப்பி வைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக