Shalin Maria Lawrence :
குஜராத் மிளிர்கிறது .
இந்த நாட்டின் தலைநகரம் அகமதாபாத் .
இந்த நாட்டை ஆளுவது அரசியல்வாதிகள் அல்ல .இந்த நாட்டை ஆளுவது பெரும் பணக்காரர்கள் ,தொழிலதிபர்கள் ,முதலாளிகள்.
இந்த நாடு ஜனஜாயக நாடு அல்ல .இது ஒரு முதலாளித்துவ தேசம்.
என் வாழ்வில் நான் மேற்கொண்ட பயணங்களில் என் எண்ணங்களை ஒரே நொடியில் புரட்டிபோட்ட மாநிலம் குஜராத் .
குஜராத்தின் உணவு பண்டங்களில் வெண்ணெய் ,நெய் மிளிர்கிறது .
குஜராத்தின் உடைகளில் கண்ணாடி வேலைப்பாடுகள் மிளிர்கிறது .
குஜராத்தின் பெண்கள் காதுகளில் வைரம் மின்னுகிறது .
குஜராத்தின் தொழிலதிபர்கள் 32 பற்களும் மிளிர சிரிக்கிறார்கள் .
குஜராத்தில் பல விதமான வெளிநாட்டு கார்கள் சூரிய ஒளியில் பளபளகின்றன.
குஜராத் ஜொலிக்கிறது .
எனக்கு பிரியமான தமிழக மக்களே ...உங்களிடம் நான் இதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும் .மோடி ஒரு மாயாஜால வித்தைகாரர்தான் . He is a magician .
மோடி குஜராத் மாநிலத்தை ஒரு மாயாபுரியாக மாற்றி இருக்கிறார் .
சாலைகளை விஸ்தாரமாக்கி இருக்கிறார் . பள்ளம் மேடுகளை சரி செய்து சாலைகள் இட்டிருக்கிறார் .நதிகளை இணைத்திருக்கிறார் .கால்வாய்களை சரி செய்திருக்கிறார்.பாலங்களை கட்டியுள்ளார். போர்க்குவரத்து பிரச்சனைகளை தீர்த்திருக்கிறார் .மின்சாரத்தை தனியார் மயமாக்கி நாட்டின் இரண்டு மிகப்பெரிய மின்சார தயாரிப்பு மையங்களை உருவாக்கி மின்சார துண்டிப்பே இல்லாத ,95 சதவிகித மின்சார இணைப்பு உள்ள மாநிலத்தை உருவாக்கியுள்ளார் .
தொழில்களை பெருக்கி குஜராத் மாநிலத்தை தொழில் வளர்ச்சி பெருகிய மாநிலமாக மாற்றி இருக்கிறார்.
இந்தியாவிலேயே GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி ) யில் குஜராத்தை மாநிலத்தை முதல் இடத்தில் வர செய்திருக்கிறார் .
மேல்சொன்னவற்றுற்காக மோடியை குஜராத் மக்கள் கொண்டாடுகிறார்கள் .அந்த மாநிலத்திற்கு வருவோர் போவோர் எல்லாரிடமும் மோடி புகழ் பாடுகின்றனர் .
அவர்கள் வாயை திறந்தாலே " எங்கள் மோடி இந்த நாட்டின் பிரதமர் ,எங்கள் மோடி எங்கள் மாநிலத்தை தலைகீழாக மாற்றி போட்டுவிட்டார் " என்று பெருமை பீத்தி கொள்ளுகிறார்கள்.
இப்பொழுது சொல்ல போகும் விஷயத்தை கேட்க நெஞ்சை பிடித்த கொள்ளுங்கள் மக்களே.
குஜராத்தில் வசிக்கும் பெரும்பாலான இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களும் மோடியை கொண்டாடு கொண்டிருக்கிறார்கள்.குஜராத் கலவரத்தை மீறி மோடி பிம்பம் அவர்களை ஆட்டி வைத்திருக்கிறது.
என் குஜராத் பயணம் இப்படி ஒரு அதிர்ச்சியை கொடுக்கும் என்று நான் நொடிபொழுதும் நினைத்ததில்லை . குஜராத் நிஜம் மிக கொடியதாக இருக்கிறது.
ஆனால் இதற்கு பின்னே இருக்கும் இரண்டு நிஜங்களை நான் உங்களுக்கு சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.
1.குஜராத்தில் இருக்கும் தொழில் சமூகம் .
குஜராத்தை ஆண்டு கொண்டிருப்பது அந்த மாநிலத்தை சார்ந்த சிறு மற்றும் பெரும் முதலாளிகள் .இவர்கள் பரம்பரை பரம்பரையாக பிசினஸ் செய்துவரும் முதலைகள் .இந்த முதலாளிகளுக்கு சட்டத்தை எப்படியாவது தங்கள் முன்னேற்றத்திற்காகவும் ,லாபத்திற்காகவும் வளைக்கவும் ,உடைக்கவும் துணிந்தவர்கள்.
மோடி செய்ததெல்லாம் இவர்களின் இந்த அதிவேக முயற்சியில் அவர்களுக்கு அதிரடியாக உதவியதுதான்.அவர்களுக்கு எது தேவையோ அவையெல்லாம் மோடி இடம் இருந்து கிடைத்தது அபரிதமாக . சட்டத்தை அவர்களுக்காக மோடி வளைத்தார் .
கடந்த வருடம் நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட பிணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பதின் முக்கிய குறிக்கோளாக இருந்தது .இந்த தொழில் சமூகத்தினரிடையே இருந்த ஒட்டுமொத்த கருப்பு பணத்தையும் வெள்ளையாக ஆக்கும் முயற்சிதான் .முயற்சி வென்றது.
இந்த வருடம் அதே நாளில் அகமதாபாதில் நான் தங்கி இருந்த வசதி படைத்த கிளப்பில் அங்கிருந்த பணக்காரர்கள் பணமதிப்பிழப்பின் ஒரு வருடத்தை படு விமரிசையாக கொண்டாடி கொண்டிருந்தனர் . நாடு அழுது கொண்டிருந்தபொழுது ,அகமதாபாத் சிரித்து கும்மாளமிட்டு
மேலும் மின்சாரம் ,சாலை வசதி ,நதி சீரமைப்பு என்று கொண்டுவரப்பட்ட அனைத்து கட்டமைப்பு முன்னேற்றங்களும் சாமானிய மக்களுக்கென்று இல்லாமல் தொழில் சமூகம் மற்றும் வெளிநாட்டு முதலாளிகள் இங்கே கொழிக்க அவர்களுக்காக செய்ய பட்ட வசதிகளே ஆகும் . இந்த ஜொலிப்பு வேலைகளால் சாமானியர்கள் முன்னேறினார்களா என்றால் இல்லை .ஆனால் இந்த தொழில் சமூகமும் (குறிப்பாக அதானி ,அம்பானி ,டாடா )அவர்கள் வளர்த்துக்கொண்டிருக்கும் ஹிந்துத்துவ வெறியுமே மோடியை அங்கே பிழைக்க வைத்து கொண்டிருக்கிறது .
அகமேதாபாதில் எங்கு நோக்கினும் அதானியின் ராஜியம்தான்.நாளை அதானிக்கு தேவையென்றால் அங்கே ஒரு புது சாலை உண்டாகும். அங்கே வீடுகள் இருந்தால் அவை உடைக்கப்படும் .
இந்த தொழில் சமூகம்தான் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறது .இந்த தொழில் சமூகத்திற்காகதான் மோடியும் ,அமித்ஷாவும் இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டிருக்கிறாராகள் .மோடியின் அனைத்து வெளிநாட்டு பயணங்களும் இந்த தொழில் சமூகத்தின் சுய வளர்ச்சிக்காதான். இந்த நாட்டில் தினம் தோறும் கொண்டு வர படும் ஒரு புதிய சட்டமும் ,பொருளாதார கொள்கைகளும் இவர்களுக்காகதான்.
மோடி ஒரு குறிப்பிட்ட இனத்திற்காக அதாவது குஜராத்தை தாய்மொழியாக கொண்ட 10% பெரும் முதாலிகளுக்காக இந்த நாட்டின் 90% மக்களின் நிம்மதியை ,வாழ்வாதாரத்தை கெடுப்பது தான் குஜராத் மாடல்.
2. குஜராத் மாடல் நிதர்சனம் என்ன ...
மோடி ஒரு magician ( மாய வித்தைக்காரர்) என்று குறிப்பிட்டிருந்தேன்.அது உண்மைதான் .
மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒரு கடுகைகூட நகர்த்தாமல் அந்த மாநிலம் வளர்ச்சியடைந்தது போல் காட்டிய மாயவித்தைக்காரர் மோடி என்பதனை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும் .
ஒரு பேஷன் ஷோ மாடல் பெண் உடம்பில் ஆயிரம் நோய் நொடியை வைத்துக்கொண்டு வெறும் வெளிப்பூச்சு ஒப்பனை செய்து கொண்டு ஊரை ஏமாற்றுவது போன்றதுதான் குஜராத் மாடல்.
குஜராத்தை வெளிநாட்டினருக்கும் பெரு முதலாளிகளுக்கும் விற்று தீர்க்கும் வேகத்தோடு மோடி அவர்கள் மறந்து போன விஷயங்கள் அநேகம் .அவை,
1.பொருளாதார ரீதியாக குஜராத் முன்னிலையில் இருப்பது போல் தோன்றினாலும் Social Development Indicators என்று சொல்லப்படும் சமூக முன்னேற்ற புள்ளியில் மற்ற மாநிலங்களை விட குஜராத் படு பாதாளத்தில் இருக்கிறது .
கல்வி ,சுகாதாரம் ,வேலைவாய்ப்பு விகிதம் அதிர்ச்சிக்குள்ளாகும் விதத்தில் குறைந்து இருக்கிறது.
அதே நேரத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் ,ஆண் பெண் பாலின வேறுபாடு விகிதம் ,குழந்தை பிறப்பில் மகளிர் இறப்பு விகிதம் போன்றவை அபாயகரமான வகையில் அதிகரித்துள்ளது .
தொழில் முதலைகளுக்காக கிராமங்களில் சாலை வசதி ,மின்சார வசதி ஏற்படுத்தி கொடுத்த மோடி அங்கு காலம் காலமாக வாழ்ந்து வரும் மக்களின் தினசரி வாழ்வியலை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு ரகுராம் ராஜன் தலைமையில் ரிசர்வ் வங்கி அமைத்த குழு ஒன்று குஜராத்தை பின்தங்கிய மாநிலமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
3.விளை நிலங்களை சட்டத்திற்கு புறம்பாக தொழிற்சாலைகளுக்கு தாரைவார்த்து கொடுத்திருக்கிறார் .
4.முன்னேற்றம் என்கிற பெயரில் பூர்வகுடிகளை அவர்கள் இடத்தில் இருந்து கட்டாயப்படுத்தி அப்புறபடுத்தி இருக்கிறார்.
5.குஜராத் காற்றி அளவுக்கு அதிகமாக தொழிற்சாலைகளால் மாசு பட்டிருக்கிறது.
6.தொழிற்சாலைகளின் வரி ஏய்ப்பாள் குஜராத்தின் பொருளாதாரம் வேறு வழியில் பாதிக்கப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் சொல்ல போனால் .அகமதாபாத் என்கிற நகரம் மட்டும் முன்னேறி இருக்கிறது .குஜராத், மக்கள் நலன் என்கிற விஷயத்தில் மிகவம் பின்தங்கிய ஒரு மாநிலமாகவே இருக்கிறது .
ஆனால் குஜராத்தின் பெரும்பாலான மக்களோ இந்த மாயவிதைக்காரன் மோடியின் கண்ணகட்டு வித்தையில் கட்டுண்டு தங்கள் மாநிலம் வட கொரியாவை போல் கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதை கண்டும் காணாமல் மோடி அலைக்கு இரையாகி கொண்டிருக்கிறார்கள் .
இந்த மக்களின் முட்டாள்தனத்தினாலும் ,பெரு முதலாளிகளின் பணபலத்தினாலும் ,ஹிந்துத்துவ கொள்கைகளினாலும் ,தொழில் சமூகத்தின் சுயநல போக்கினாலும் மீண்டும் அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியே வரும் என்பது தெள்ள தெளிவாக விளங்குகிறது .
பிகு : social indicators என்று நான் சொன்ன அனைத்தினிலும் தமிழ்நாடு குஜராத்தைவிட முன்னிலையில் உள்ளது.FDI என்று சொல்லப்படும் வெளிநாடு நேரடி முதலீட்டில் இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளா ,குஜராத்தை விட முன்னணியில் உள்ளன.
ஷாலின்

Photo image explains all.Nice post Current upadate Tamil Newspaper
பதிலளிநீக்கு