திங்கள், 25 டிசம்பர், 2017

நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி நீக்கம்! அதிமுக அதிரடி நடவடிக்கை

நக்கீரன்: ஆர்.கே.நகர் தோல்வியை அடுத்து அதிமுவின் அவசர ஆலோனைக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.எஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை என்று தினகரனை ஆதரிக்கும் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், ரெங்கசாமி, வி.பி.கலைராஜன், பார்த்திபன், முத்தையா ஆகிய 6 மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இதன் பின்னர், அதிமுக செய்தித்தொடர்புக்குழு உறுப்பினர் நாஞ்சில் சம்பத் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தியும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுக மகளிர் அணி துணைச்செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக