வெள்ளி, 8 டிசம்பர், 2017

கன்னியாகுமரியை கேரளாவோடு இணைத்துவிடுங்கள்.. அரசுக்கு சவுக்கடி கொடுக்கும் மீனவர்கள்

சிவசங்கர் எஸ்.எஸ்  :  இது பாதிக்கப்பட்ட மக்களின் வெற்று குரல் அல்ல, தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்ட சவுக்கடி. இன்னும் கீழே இறங்கி கூட சொல்லலாம்.....
நேற்றைய என் நிலைத்தகவலில், "மீனவர்களின் வாழ்க்கை பெரும் பகுதி, கடலிலேயே கரைந்து விடுகிறது. அதனால் அரசியல் ரீதியாக பெரும் சக்தியாக திரளவில்லை அவர்கள். இதனாலேயே இவர்கள் மீதான அக்கறை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பெரிதாக வரவில்லையோ என்று தோன்றுகிறது", என்று குறிப்பிட்டேன்.
இன்று மீனவ மக்கள் அரசியல் சக்தியாக கிளர்ந்தெழுந்து விட்டனர். முப்பத்தைந்து கிலோமீட்டர் தூரம் நடந்தே போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். ஆண்கள் மாத்திரமல்ல, பெண்களும் பெருமளவில் திரண்டுள்ளனர்.

குழித்துறை ரயில்வே நிலையத்தில் காலை குவிந்தனர். தண்டவாளத்தில் அமர்ந்து சத்தியாகிரகம் துவங்கினர். நாகர்கோவில் - கோட்டயம் ரயில்வே பாதை தடைப் பட்டுள்ளது. 12 மணி நேரமாக போராட்டம் தொடர்ந்தது.
இரவும் போராட்டம் தொடர்வதற்கான உறுதி தெரிந்தது. அவர்கள் கலைவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. போராட்டம் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு தான். காரணம், தங்கள் வீட்டை சேர்ந்தவர்களை காணவில்லை என்று அவர்கள் போராடுகிறார்கள். அவர்கள் அடுத்தவர்களுக்காக போராடவில்லை, சொந்தப் பிள்ளைகளுக்காக போராடுகிறார்கள்.

போராடுபவர்களின் கோரிக்கை, " முதலமைச்சர் நேரில் வர வேண்டும். எங்கள் வருத்தங்களை உணர வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்". முதல்வர் காதில் இது விழுமா என்ற நிலையில், முதல்வர் வருவதாக சொல்லி இப்போது போராட்டத்தை ஒத்தி வைக்க செய்துள்ளனர்.
முதல்வர் உடல் நலம் குன்றியிருந்தாலோ, மன நலம் குன்றியிருந்தாலோ, அவர் அங்கே வர வேண்டும் என்ற கோரிக்கை வந்திருக்காது. ஏற்கனவே அதிமுக முதல்வர்கள் இது போன்ற சூழல்களை சந்தித்திருக்கிறார்கள்.
இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எல்லாவிதத்திலும் நலமாக இருக்கிறார், வளமாக இருக்கிறார், பலமாக இருக்கிறார், பல் வலுவாக இருக்கிறார். அதனால் தான், அவர் வர வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.
"ஓகி" புயலின் உக்கிரத் தாண்டவத்தின் போது மகிழ்வாக, " புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா" கொண்டாடிக் கொண்டிருந்தார் முதல்வர். அப்புறமும் சென்னையில் 'அமர்ந்திருக்கிறாரே' ஒழிய, கன்னியாகுமரி செல்லவில்லை.
இன்று குழித்துறை ரயில் மறியல் போராட்டம் சூடு பிடித்துள்ள நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்தில் வணங்கி வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
அவர் குமரி வராத காரணம், பயம். குமரி சென்ற 'வல்லமை மிகுந்த' ஆளுநரே தலைதெறிக்க ஓடி வந்து விட்டார். மக்களை சந்தித்து, பதிலளிக்க யாருக்கும் திராணியில்லை. அதே போல, அரசு அதிகாரி பேடியாலும் மக்களை சமாளிக்க முடியவில்லை. இதே போன்ற 'எதிர்' வரவேற்பு தான் தனக்கு கிடைக்கும் என நினைத்து தான் முதல்வர் எடப்பாடி வரவில்லை.
சிலர் விமர்சனம் வைக்கிறார்கள் போராட்டம் குறித்து, "பாவாடை அணிவகுப்பு இது என்று". பாவாடை என்று பாதிரியார்கள் அணியும் உடையை நக்கல் நையாண்டி செய்கிறார்கள். இந்துத்துவாவாதிகளின் வாதம் தான் இது. அதாவது, இந்த மீனவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக