ஞாயிறு, 10 டிசம்பர், 2017

நிர்மலா சீதாராமன் இனித்தான் புதிதாக சிறப்பு கப்பலை அனுப்ப போகிறாராம் .. பொன்னார் கேட்டாராம்!

Received a phone call from Hon.Min. @PonnaarrBJP . On his suggestion, have directed @IndiaCoastGuard to have fishermen from Thoothur on board their vessel, while on Search & Rescue operations. @indiannavy @OfficeOfOPS @DefenceMinIndia @BJP4TamilNadu 

Shyamsundar- Oneindia Tamil : சென்னை: ஓகி புயல் காரணமாக காணாமல் போன மீனவர்களை தேடுவதற்கு இந்திய கடற்படை அனுப்பப்பட்டு இருப்பதாக பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருக்கிறார். மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழகத்தை ஓகி என்ற புயல் மிகவும் மோசமாக தாக்கியது. இதனால் கன்னியாகுமரி, கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் காணாமல் போனார்கள். இவர்களில் பலர் இன்னுமும் வீடு திரும்பவில்லை. இவர்களை தேடும்பணி தற்போது முடிக்கிவிடப்பட்டு இருக்கிறது. இதற்காக தற்போது இந்திய கடற்படை சிறப்பு கப்பல் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இதற்காக 'வைபவ்' என்ற நீரில் மூழ்கி தேடக்கூடிய கப்பல் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த கப்பல் தூத்துக்குடியிலிருந்து இன்னும் சில மணிநேரத்தில் புறப்படும். தீவுகளில் சரியான வழி தெரிந்த அனுபவமிக்க சின்னத்துறை மற்றும் தூத்தூர் மீனவர்கள் சிலரும் இந்த தேடுதலில் உதவிட செல்வதாக கூறப்படுகிறது. மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக நிர்மலா சீதாராமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது என பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்
//tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக