ஞாயிறு, 17 டிசம்பர், 2017

அதிகாரி பெரியபாண்டியனை சுட்டு கொன்ற நாதுராமின் மனைவி மஞ்சு கைது !

ராஜஸ்தான்: இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டுக்கொன்ற நாதுராமின் மனைவி கைது

மாலைமலர்:  ராஜஸ்தானில் தமிழக போலீஸ் இன்ஸ்பெண்டர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளி நாதுராமின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்ப்பூர்: சென்னையில் நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார், கொள்ளை கும்பலை சுற்றி வளைத்த போது, கொள்ளை கும்பல் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, இஸ்பெக்டர் பெரிய பாண்டியனிடம் இருந்த துப்பாக்கியை பறித்து அவரை நாதுராம் என்பவன் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பினான். இதனையடுத்து, கொலையாளியை பிடிக்கும் பணியில் இரு மாநில போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொலையாளி நாதுராமின் மனைவி மஞ்சுவை இன்று போலீசார் கைது செய்தனர்.< இதே வழக்கில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நாதுராமின் கூட்டாளி நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தேஜாராம், அவரது மனைவி பித்யா, மகள்கள் சுகுனா, ராஜல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரும் தமிழக போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்று கூறப்படுகிறது. பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட செங்கல்சூளை தேஜாராமுக்கு சொந்தமானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக