செவ்வாய், 5 டிசம்பர், 2017

மதுசூதனன் ஆட்கள் மிரட்டல் - விஷால் வெளியிட்ட ஆடியோ .. மதுசூதனன் வேட்பு மனு ஏற்கப்படுமா?

மதுசூதனன்  விஷாலின் ஆதரவாளரை மிரட்டிய ஆடியோவை ஏற்றுகொண்டால் மதுசூதனன் வேட்பு மனுவை தள்ளி படி செய்யவேண்டி நிலை ஏற்பட்டுள்ளது . தேர்தல் ஆணையம் என்ன தில்லுமுல்லுகளை செய்யும் என்பது ஊகிப்பது கடினம் .. எனினும் அப்படி நடந்தால் தினகரன் பக்கம் அதிமுக வாக்குகள் அதிகம் வந்துவிடும் .. அது வெற்றி வாய்ப்பை தருமா என்பது கேள்விக்குறிதான் . ஆனாலும் அவரது அரசியல் பயணத்துக்கு அது பேருதவியாக இருக்கும் .
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இவர் வேட்புமனு தாக்கல் செய்ய முன்மொழிந்த தொகுதியைச்சேர்ந்த 10 பேரில் 2 பேர் திடீரென்று தாங்கள் முன்மொழியவில்லை என்று பின்வாங்கினர். இதனால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து விஷால், என்னை முன்மொழிந்த அந்த 2 பேரும் மிரட்டப்பட்டுள்ளனர். அதில் வேலு என்பவரிடம் விஷால் பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆடியோவில், மதுசூதனன் ஆட்கள் தன்னை மிரட்டியதாகவும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொடுத்து ஆசை காட்டியதாகவும், அதற்கு சம்மதிக்கவில்லை என்பதால், என் குடும்பத்து பெண்களை அழைத்துச்சென்று மிரட்டி கையெழெத்து வாங்கிவிட்டனர். விஷாலுக்கு நான் முன்மொழியவில்லை. அப்படி கூறுவது பொய். அது என் கையெழுத்தே இல்லை என்று அந்தப்பெண்ணை எழுதிக்கொடுக்க வைத்து கையெழுத்து வாங்கிவிட்டனர்.
 அரசியல் கட்சி தொடங்கமாட்டேன்.   நான் தேர்தலில் நிற்பதில் அரசியல் பின்னணி என்று எதுவும் இல்லை.  நடிகர் கமல்ஹாசன் சொல்லித்தான் நான் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதாக கூறுவது தவறு.  அதில் உண்மையில்லை. 
நீங்கள் ( விஷால்) போட்டியில் இருந்து நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிச்செய்தனர் என்று வேலு என்பவர் விஷாலிடம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக