வெள்ளி, 22 டிசம்பர், 2017

திண்டுக்கல் லியோனி : 2ஜி ..பிராமணர்கள் எல்லாம் சேர்ந்து சதி செய்த வழக்கே

2ஜி வழக்கில் ராஜா, கனிமொழி விடுதலையை தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழக கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின் மாநில துணைத் தலைவரும், பட்டிமன்ற நகைச்சுவை நடுவருமான திண்டுக்கல் லியோனியிடம் இந்த தீர்ப்பை பற்றி கேட்டபோது... 2009ம் ஆண்டு மத்திய தொலை தொடர்பு அமைச்சராக ராஜா இருந்தபோது தொடரப்பட்ட வழக்கு. அதோடு இந்த வழக்கும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு திட்டமிட்டு புனையப்பட்ட ஒரு கதை என்பது இந்த தீர்ப்பு மூலம் நிரூபணமாகி இருக்கிறது.
2009ல் ராஜா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அ.தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகள் எல்லாம் கையில் எடுத்துக் கொண்டு ஒரு லட்சத்து 76ஆயிரம் கோடி வருமானம் பார்த்தனர் என்று மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர்.
ஆனால் பாமர மக்களோ அது புரியாமல் ராஜாவும், கனிமொழியும் ஏதோ டெல்லியில் உள்ள ஒரு வங்கியில் லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடித்துவிட்டனர் என்று நினைத்தனர்.
அது முற்றிலும் பொய் என இந்த தீர்ப்பு மூலம் நாட்டுமக்கள் தெரிந்து கொண்டனர். ராஜா ஒரு பெரியார் தொண்டர் அதோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அப்படிப்பட்டவர் மத்திய அமைச்சராக இருக்கக் கூடாது என்பதற்காக பிராமணர்கள் எல்லாம் சேர்ந்து சதி செய்த வழக்கே இப்பொழுது அவர்களுக்கு சவுக்கடியாக மாறி மூஞ்சியில் கறியை பூசிவிட்டது.
< தகவல் தொடர்பு துறை மூலம் ஒரு ரூபாய்க்கு மக்கள் உலகம் முழுவதும் பேசுவதற்கு வழி செய்தார் ராஜா. இதன்மூலம் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாமே தவிர அதன்மூலம் ராஜா ஒரு பைசா கூட எடுக்கவில்லை. அப்படி இருந்தும் கூட இந்த பொய் வழக்குக்காக ஒன்றரை ஆண்டு சிறையில் இருந்து கஷ்டபட்டவர்தான் ராஜா. இந்த வழக்கு மூலம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பெரும் கலங்கம் ஏற்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியே வந்தார்.

ஆனால் அவர் இப்ப இல்லை இருந்தாலும் சி.எம்.ஆக இருக்கக்கூடிய எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ம் இந்த தீர்ப்பு பலனை புரிந்து கொள்ளட்டும். இந்த தீர்ப்போடு ஆர்.கே. நகர் தேர்தல் வெற்றியும் எங்களுக்க சாதகமாகவே அமையும் இதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதுபோல் இந்த வழக்கிற்கு எந்த ஒரு சம்மந்தமும் இல்லாத கனிமொழி மீதும் பொய் வழக்கு போட்டதின் பேரில் செய்யாத தவறுக்காக ஆறு மாதம் பீகார் சிறையில் கனிமொழி கஷ்டப்பட்டார்.

அதோடு ஆறு வருடம் மன உளைச்சலுக்கும், கனிமொழி ஆளானார். ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவரின் மகளாக இருந்தும்கூட இந்த பொய் வழக்கை உடைத்துக் காட்டுகிறேன் என்ற சபதத்தோடு இருந்து இன்று வெற்றி பெற்றிருக்கிறார். இப்படிப்பட்ட கனிமொழி எம்.பி.க்கு உறுப்பினர் பதவி கொடுத்த போது ஜெயலலிதா முதல் அனைத்து எதிர்க்கட்சிகளுமே 2ஜி வழக்கில் குற்றம் சாட்டியவர் எப்படி எம்.பி.க்கு தகுதியாவார் என்று குரல் கொடுத்தனர். ஆனால் இந்த தீர்ப்பு மூலம் எம்.பி.க்கு தகுதியானவர் என்பதை நிலைநாட்டிவிட்டார்.

திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இந்த 2ஜி மூலம் ஒரு கலங்கம் ஏற்படுத்தி இருந்தும் கூட தொடர்ந்து தன்னுடைய உழைப்பாலும், தொண்டர்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக ஸ்டாலின் இருந்து வந்ததுனாலேயே இன்று வெற்றி பெற்று இருக்கிறார். அதுபோல் அறிவாலயம் வந்து தொண்டர்களை சந்தித்த கலைஞரும் கூட இந்த தீர்ப்பு மூலம் மீண்டும் பூரண குணமடைந்து மக்களையும், தொண்டர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கிறோம். அதோடு கூடிய விரைவில் கலைஞர் ஆசியோடு ஸ்டாலின் ஆட்சியும் தமிழகத்தில் உருவாகப் போகிறது இதற்கு இந்த தீர்ப்பு முதல்கட்டமாக அமைந்து இருக்கிறது என்று கூறினார்!< - சக்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக