வியாழன், 21 டிசம்பர், 2017

ஆர் ராசா ,கனிமொழி விடுதலை ... 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இருந்து அனைவரும் விடுவிப்பு

முழு விபரம் இன்னும் சில மணிநேரத்தில் வெளியாகும், தற்போது வாய் மொழியாக அறிவிப்பு  வெளியானது. டெல்லி சி பி ஐ சிறப்பு நீதிமன்ற   நீதிபதி  ஒ பி சயினி தனது தீர்ப்பில் :   இந்த வழக்கில் சி பி ஐயினால் எந்த குற்றமும் நிருபிக்க கூடிய சாட்சியம் கிடையாது என்றும்  குறிப்பிட்டுள்ளார்.. நீதிமன்ற வழக்கத்தில் திமுக ஆதரவாளர்கள் பட்டாசு கொழுத்தி ஆரவாரம்
Sivasankaran Saravanan :  176000 கோடி என்ற ஒரேயொரு எண்ணை வைத்துக்கொண்டு ஒரு கட்சியின் மீதும் ஆ.ராசா என்ற தனி மனிதர் மீதும் வன்மத்தை கட்டமைத்து காழ்ப்புணர்ச்சியை பரப்பிய அத்தனை ஊடகங்களும், பார்ப்பனிய லாபியும் அண்ணன் ராசா விடம் மன்னிப்பு கேட்பார்களா?!
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரயும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி தீர்ப்பளித்துள்ளார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. காலை 10.30மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்திருந்தார்.


2ஜி ஏலத்தில் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக 2010 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஆ.ராசா, கனிமொழி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. 6 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த இந்த வழக்கின் விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி நிறைவுற்றது.

தீர்ப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2ஜி வழக்கில் அக்டோபர் 25 ஆம் தேதி அல்லது அடுத்த ஓரிரு நாளில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்திருந்தார். இருப்பினும் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு தேதி அறிவிப்பு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து டிசம்பர் 21 ஆம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி, ஷாஹித் பல்வா உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் ஓ.பி.சைனி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இன்று காலை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா, கனிமொழி, ஷாஹித் பல்வா உள்ளிட்ட அனைவரும் ஆஜரானர்.

 இதையடுத்து காலை 10.30 மணி அளவில் வந்த நீதிபதி ஓ.பி.ஷைனி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரயும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக