வியாழன், 7 டிசம்பர், 2017

சாதி மறுப்பு திருமணம் செய்த தலித்களுக்கு 2.5 லட்சம் உதவி தொகை .... இதுவரை பெறாதவர்கள் விண்ணப்பிக்கவும்

Shalin Maria Lawrence : சாதி மறுப்பு திருமணம் அடிப்படையில் தலித்துகளை திருமணம் செய்பவர்களுக்கு உதவி தொகையாக அண்ணல் அம்பேத்கர் பெயரில் 2.5 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்கி வருகிறது . அதன் வருமான உச்சவரம்பை இன்று அரசு முற்றிலுமாக நீக்கியுள்ளது .இது வரை இந்த உதவி தொகை பெறாத தலித் சமூகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் இதை பெற்றுக்கொள்ளலாம் .
கலப்பு மணம் புரியும் தைரியமான முடிவு எடுப்பதை கவுரவிக்கவும், அவர்கள் திருமண வாழ்க்கைக்கு உதவும் வகையிலும், இந்த மானியம் வழங்கப்படுகிறது.
முதல் திருமணத்துக்கு மட்டுமே இது வழங்கப்படுகிறது. மேலும், ஹிந்து திருமணச் சட்டத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
இதற்காக, திருமணமாகி ஓராண்டுக்குள் விண்ணப்பிக்கலாம். தற்போது, இந்த திட்டத்துக்கான வருமான உச்ச வரம்பை, மத்திய சமூக நீதித் துறை நீக்கி உத்தரவிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக