சனி, 30 டிசம்பர், 2017

பிரான்சுக்கு சென்ற 22 பள்ளி மாணவர்களை காணவில்லை .. மேற்கு நாடுகளுக்கு அகதியாகி ...?

The CBI has registered an FIR after 22 minors from Punjab, Haryana and Delhi were allegedly illegally taken to France by three travel agents last year in the garb of giving them rugby coaching and went missing, agency officials said ...
மின்னம்பலம் ;ரக்பி விளையாட்டு பயிற்சிக்காக ஃபிரான்ஸ் சென்ற 22 இந்திய மாணவர்கள் மாயமானது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து நேற்று (டிசம்பர் 29) விசாரணையைத் தொடங்கியது.
2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபிரான்சில் நடைபெற்ற சர்வதேச ரக்பி போட்டியில் கலந்துகொள்ள டெல்லி, பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த 13 முதல் 18 வயதுடைய 25 பள்ளி மாணவர்கள் சென்றுள்ளனர். ஃப்ரெஞ்ச் குழுவிடம் இருந்து வந்த அழைப்பின் அடிப்படையில் மாணவர்கள் பாரிசுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அங்கு ஒரு வாரம் பயிற்சி வகுப்பை முடித்த அவர்கள் இந்தியா திரும்பவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

சிபிஐ செய்தித் தொடர்பாளர் அபிஷேக் தயால், “பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடக்கும் ரக்பி விளையாட்டு பயிற்சிக்கு இந்திய மாணவர்கள் 25 பேரை அழைத்துச் செல்வதாக, அவர்களின் பெற்றோரை பரீதாபாத் மற்றும் டெல்லியில் உள்ள டிராவல் ஏஜென்ட்கள் அணுகியுள்ளனர். ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமிருந்து 25 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலித்துள்ளனர்.
பின்னர் 25 மாணவர்களையும் பஞ்சாபை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் எனக்கூறி, பாரீஸ் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஒரு வாரம் பயிற்சி முகாமில் 25 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். ஏஜென்ட்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த 2 பேர் அங்கிருந்து தப்பி இந்தியா திரும்பினர். அதைத் தொடர்ந்து, 23 மாணவர்களின் நாடு திரும்புவதற்கான டிக்கெட்டை ஏஜென்ட்கள் ரத்து செய்தனர். இதனால் மாணவர்கள் அங்குள்ள குருத்வாராவில் வலுக்கட்டாயமாகத் தங்க வைக்கப்பட்டனர். அதன் பின்னர் அவர்களைக் காணவில்லை. அவர்களில் ஒருவரைக் கைது செய்த ஃபிரெஞ்ச் போலீஸார், அது குறித்து இண்டர்போல் போலீசுக்கு தகவல் அளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், மாயமான மாணவர்களின் பெற்றோரைத் தொடர்புகொண்டு விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது”எனத் தெரிவித்துள்ளார்.
லலித் டேவிட் டீன், சஞ்சீவ் ராய் மற்றும் வருண் சௌத்ரி ஆகிய 3 ஏஜென்ட்களின் அலுவலகங்களுக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்த ஆவணங்களைக் கைப்பற்றினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக