திங்கள், 25 டிசம்பர், 2017

தினகரன் வீட்டு வாசலில் 20 ரூபாய் டோக்கனோடு ஆர் கே நகர் வாக்காள பெருமக்கள்?

தினகரன் :சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்கள் கையில் ரூ.20 டோக்கனுடன் பணம் வருமா என்று எதிர்பார்த்து கொண்டுள்ளனர். தேர்தல் முடிந்தவுடன் ரூ.20 டோக்கனுக்கு ரூ.10 ஆயிரம் வரை தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. சுயேட்சை வேட்பாளர் அளித்த வாக்குறுதியை நம்பி ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தோம் என்று ஓ.பி.எஸ் கருத்து தெரிவித்துள்ளார். ரூ.20 நோட்டை வைத்துக்கொண்டு டி.டி.வி வீட்டு வாசலில் மக்கள் காத்திருக்கின்றனர் என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். மேலும் டிடிவி தினகரன் ஒரு மாயமான் என்று ஓ பன்னீர் செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக