திங்கள், 25 டிசம்பர், 2017

ஆறு அமைச்சர்கள், 16 எம்.எல்.ஏ.,க் கள், தினகரனுக்கு தொலைபேசியில் வாழ்த்து

தினமலர் :தினகரன் வெற்றி பெற்றதால், முதல்வர் மாற்றம் வரலாம் என்ற பேச்சு, அ.தி.மு.க.,வில் எழுந்துள்ளது.>சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சுயேச்சை வேட்பாளர், தினகரன், அபார வெற்றி பெற்றுள்ளார். 'மூன்று மாதங்களில், ஆட்சி கவிழும்' என, வெற்றிக்கு பின், அவர் தெரிவித்துள்ளார். அவரது ஆதரவு, முன்னாள், எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வன், 'எங்கள் பக்கம், 60 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்' என்றும் கூறியுள்ளார்.இது, அ.தி.மு.க.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அ.தி.மு.க., வினர் கூறியதாவது: தினகரன் தரப்பினர் கூறுவது போல், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், < அவர் பக்கம் சாய்ந்தால், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும். அதற்குள், கட்சியில் அதிரடி மாற்றங்களை செய் தாக வேண்டும்.ஆர்.கே.நகர் தோல்விக்கு, முதல் வர், பழனிசாமி அணியினர், முறையாக தேர்தல் பணியாற்ற வில்லை என, துணை முதல்வர், பன்னீர் அணியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தினகரன் ஆதரவாளர்கள், தற்போதும், அ.தி.மு.க., பொறுப்பில் நீடிக்கின்றனர். அவர்களை நீக்கி விட்டு, புதியவர்களை நியமித்தால் தான், மற்றவர்களுக்கு பயம் வரும். இதை, முதல்வர் பழனிசாமியிடம் பலரும் வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும், அவர், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



அதேபோல, ஆட்சிக்கும், கட்சிக்கும் இரட்டை தலைமை இருப்பதும், பல குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, ஜெ., காலம் போல், ஆட்சிக்கும், கட்சிக்கும் ஒருவரே தலைவர் என்ற, முறையை கொண்டு வர வேண்டும். இல்லையேல், கட்சிக்கு ஒருவர், ஆட்சிக்குமற்றொருவர் என்ற, நிலையையாவது ஏற்படுத்த வேண்டும்.


மேலும், ஜெ., செய்தது போல், தேர்தலில் சரிவர செயல்படாத அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதியவர் களை நியமிக்க வேண்டும். அவர்கள், இங்கே இருந்து, தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதை < அனுமதிக்கக் கூடாது. ஆளும் கட்சியில், எப்படியாவது கோஷ்டி பூசல் வெடிக்கும்; அப்போது, தன்னிடம் வருவர் என்ற நம்பிக்கையில், தினகரன், 'விரைவில் ஆட்சி கவிழும்' என, கூறி வருகிறார். அவர் கூற்றுக்கு வலு சேர்ப்பதுபோல்,வேலுார் எம்.பி., செங்குட்டுவன், நேற்று அணி மாறியுள்ளார்.


அத்துடன், ஆறு அமைச்சர்கள், 16 எம்.எல்.ஏ.,க் கள், தினகரனுக்கு, தொலைபேசியில் வாழ்த்து கூறியதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவிக் கின்றனர். அது உண்மையெனில், விரைவில், முதல்வர் மாற்றம் அல்லது ஆட்சி மாற்றம் ஏற்படலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக