ஞாயிறு, 3 டிசம்பர், 2017

1,154 மீனவர்கள் மீட்பு : மத்திய பாதுகாப்புத் துறை!

1,154 மீனவர்கள் மீட்பு : மத்திய பாதுகாப்புத் துறை!நக்கீரன் :32 படகுகளில் இருந்து தமிழக மீனவர்கள் 346 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல்படை தகவல்கள் அளித்துள்ளன. மின்னம்பலம் :மேலும் கர்நாடக மாநிலம் கர்வார் பகுதியில் தமிழக மீனவர்கள் பத்திரமாக இருப்பதாக கடலோர காவல்படை தகவல்கள் அளித்துள்ளன. மேலும் 97 படகுகளில் இருந்து கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா மீனவர்கள் 901 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓகி புயல் காரணமாக கடலில் சிக்கிய தமிழக, கேரள மீனவர்கள் 1,154 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ஓகி புயல், கடந்த 2 தினங்களுக்கு முன் தென் தமிழகத்தை ஒரு புரட்டு புரட்டி விட்டது. இதனால் கன்னியாகுமரி,தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்தப் புயலின் போது கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக, கேரள மாநிலங்களைச் சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போயினர். அவர்களைக் கண்டுபிடித்து தருமாறு வலியுறுத்தி அவர்களது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களைத் தேடும் பணியில் விமானப்படை, கடலோர காவல்படை, கப்பற்படை தீவிரமாக ஈடுபட்டு, கடலின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சக ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “இன்று (டிசம்பர் 3) காலை வரையில் பல்வேறு மாநிலங்கள் குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த 1,154 மீனவர்கள் மீட்கப்பட்டு கோவா, கர்நாடகம், மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக