வெள்ளி, 10 நவம்பர், 2017

படசுருள் LGBT... தமிழ் சினிமா பத்திரிக்கை வரலாற்றில் ஒதுக்கபட்ட ஒடுக்கபட்ட மக்களுக்காக

Malini Jeevarathnam ; எத்தனேயோ தமிழ் பத்திரிக்கைளில் அரை பக்கத்திலும் 4 வரியிலும் ஏதோ ஒரு மூலையில் அங்கங்கு LGBT பற்றிய கதைகளையும் காதலையும் படிக்கும் போது அந்த நாளே முழுமையாகிவிடும் ... ஆனால் எனக்கு இந்த மாதம் முழுமை பெற்றது ... ஒரு மாத இதழ் முழுக்க முழுக்க ஒடுக்கபட்ட பாலீர்ப்பு மக்களின் காதலின் கண்ணீரின் கொண்டாடத்தின் குரலாய்... படசுருள் LGBT நவம்பர் மாத இதழ் 2017 🙂
ஆக தமிழ் சினிமா பத்திரிக்கை வரலாற்றில் ஒதுக்கபட்ட ஒடுக்கபட்ட மக்களுக்காக ஒதுக்கபட்ட பக்கங்கள் மட்டுமில்லாமல் ஒரு முழுஇதழின் குரலாய் இந்த மாத இதழ் .... மகிழ்ச்சி தோழர் Arun Mo
தோழர் மௌலி ஆர்த்தி வேந்தனின் கடிதங்களாலும் கட்டுரைகளாலும் இன்ன பிற LGBT படங்களை பற்றிய புரிதலாலும் வாசிப்பில் மகிழ்ந்திருக்கிறேன் ...
ஆர்த்தியின் தோளோடு தோள் சேர்த்து கடிதத்தில் மார்க் ஆஸ்டனுக்கு எழுதும் வரிகள் என் தூக்கத்தை கலைத்தன
// அடக்குபவர்களின் வார்த்தைகளை பறித்தே அவர்களுக்கு எதிராக போராடுவது என்பது எவ்வளவு அற்புதமானது //

- Arthi Vendan
// நேரடி உறவுகளை பற்றி படம் எடுப்பவர்களிடம் உங்கள் படம் நேரடி உறவுகளை பற்றியதா என கேள்வி கேட்பிர்களா ? இல்லை தானே அப்படியென்றால் எங்களிடம் மட்டும் எப்படி குறிகளின் அடிப்படையில் , காதல் படங்களுக்கு கேள்விகள் எழுப்பபடுகின்றன //
-இயக்குனர் ஒனிர்
// எங்கள் கதைகள் எங்களோடு மறைந்துவிடுகின்றன . அல்லது வாய்வழி வரலாறாக இன்னொருவருக்கு சொல்லபடுகின்றன. அதற்காக நாங்கள் இருந்ததே இல்லை என்று பொருளாகிவிடாது. எங்கள் வரலாறு பாரபட்சம் அடக்குமுறை மற்றும் துன்புறுத்தல் வடிவில் அமைந்துள்ளது //
- சந்திர மௌலி
// இங்கு தலீத் பற்றி படம் எடுத்தால் நீங்கள் ஒரு தலீத் . LGBT காதல் பற்றி படம் எடுத்தால் நீங்கள் ஒரு Lesbian அல்லது Gay ... நீங்கள் திருநங்கையை பற்றி படமெடுத்தால் நீங்கள் ஒரு திருநங்கை அல்லது திருநங்கையோடு தொடர்பு வைத்திருப்பவர் ... பெண்களை பற்றி பேசும் படத்தை எடுத்தால் நீங்கள் ஒரு பெட்டை அல்லது சேலைக்கு ஜார்ரா அடிப்பவர் என முத்திரை குத்தபடுகிறது ... இப்படியான புரிதலில் இருந்து நம் ஜனங்கள் எப்பொழுது வெளியில் வர போகிறார்கள் . எல்லா படைப்புமே அந்த படைபாளிக்கு ஏற்படும் உணர்வின் தாக்கத்தின் வெளிபாடாகதான் அது உருவாக்கபடுகிறது. ஒரு Gay படத்தில் வேலை பார்த்தால் நமக்கும் அந்த முத்திரை குத்துவார்கள் என பயந்தாள் ஒருசுகந்திரமான படைப்பை ஒருகாலும் எடுக்க முடியாது ... //
குத்தபடும் முத்திரையை உடைக்க ஒரு படமெடுத்தால் குத்தபட்ட முத்திரையாக மாறுவது மகிழ்ச்சிதான் . எப்படி பார்த்தாலும் நான் ஒரு Gay என் காதலை நினைத்து எல்லா சூழலிலும் எனக்கு மகிழ்ச்சியே 🙂
- Malini Jeevarathnam
இப்படியாக எங்கள் எல்லாருடைய குரலாகவும் இந்த மாத இதழ் நிறம்பி இருக்கிறது .... என் நேர்காணலை எழுதிய எழுத்தாளர் தமயந்தியுடன் என் நினைவுகளை பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி ... Ka Nagappan அண்ணாவின் மான்டேஜ் மனசு புத்தகத்தை போலவே மான்டேஜ் மனதாய் ஓர் நேர்காணல் ... 🙂 நன்றி தோழமைகளுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக