புதன், 15 நவம்பர், 2017

அறம் ... சாதனை யாரோ .. பாராட்டு வேறு யாருக்கோ ? ஒரு அறச்சீற்றம்!

Brinda Keats : அறம் படம் நல்லாத்தான் இருந்துச்சி. ஆனாலும் எல்லா இந்திய திரைப்படங்கள் சொல்லும் ஒரு முட்டாள்தனத்தையே இதுவும் சொல்லுது, reinforce பண்ணிது - நம்மளை பிரச்சனைல இருந்து காப்பாத்த ஒரு ரட்சகர் வேணும் அப்படிங்கிறதை.
சக கிராமத்துக்காரங்க உதவியோட ஒருத்தர் அவர் குழந்தை உயிரை பணயம் வெச்சி தன்னோட இன்னொரு குழந்தையை காப்பாத்துறார். இதுக்கு எதுக்குடா நயந்தாரா காலுல விழனும்? நியாயமா காறி தானே தூப்பி இருக்கனும்? ஏதோ நயன்தாரா அவுங்க குழந்தையை காப்பாத்த அனுப்பி இருந்தா கூட பரவாயில்லை. நம்ம பிரச்சனையை நம்ம சரி செஞ்சதுக்கு இவங்களுக்கு எதுக்கு நன்றி?
அரசாங்கத்தாலோ ஜனநாயகத்தாலோ மக்களுக்கு பிரயோஜனம் இல்ல மக்கள் தங்களை மட்டுமே நம்பினால் தான் உண்டு என்பதை காட்ட அருமையான வாய்ப்பை இயக்குனர் தவற விட்டுட்டாரோ அப்படினு தோணுது.
P.S - தயவு செய்து யாராவது ஐஏஎஸ்/ஐபிஎஸ் சிலபஸ்ல அவுங்க செய்ற வேலை ஆளும் வர்க்கத்துக்கு எடுபுடி வேலைத்தானு தெளிவு படுத்துங்க. பயபுள்ளைகளுக்கு நம்ம ஸ்கூல் பசங்களுக்கு தெரிஞ்சதுக்கூட இன்னும் இவங்களுக்கு தெரியல. மக்கள் சேவைக்கு எதுக்குடா அதிகாரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக