ஞாயிறு, 26 நவம்பர், 2017

கமலஹாசன் பாஜக, காங்கிரஸுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு ..

tamilthehindu :பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கொள்கை ரீதியில் கூட்டணி வைக்க மாட்டேன். ஆனால், தமிழகத்தின் நலன் கருதி கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
டெல்லியில் ஆங்கில பத்திரிகையின் கருத்தரங்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். தனது அரசியல் நுழைவு, கட்சியின் நோக்கம் ஆகியவை குறித்து இக்கருத்தரங்கில் அவர் பேசியதாவது:< விரைவில் கட்சி பெயர்</ அரசியல் கட்சி தொடர்பான ஆலோசனைகள், பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடந்து வருகின்றன. அதற்கான பணிகளில்தான் தற்போது ஈடுபட்டு வருகிறேன். விரைவில் அரசியல் கட்சியின் பெயர், கொள்கைகள் ஆகியவற்றை வெளியிடுவேன். தமிழக அரசியல் களத்தில் என்னை முன்னிறுத்த மாட்டேன். மாறாக, இங்கு என்ன தேவை, நாங்கள் என்ன செய்ய இருக்கிறோம் என்பது போன்ற மாற்றத்தை மட்டுமே முன்னிறுத்துவேன்.

தமிழக அரசியலில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னை நிச்சயம் ஆதரிப்பார்கள்.
அரசியலுக்கு வரும் தைரியம் எனக்கு இருக்கிறது. எந்த ஒரு தோல்வியைக் கண்டும் பயப்படாத எனக்கு அரசியலிலும் தோல்வி பயம் இல்லை.
பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் கொள்கை ரீதியில் கூட்டணி வைக்க மாட்டேன். ஆனால், தமிழகத்தின் நலன் கருதி கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக, காங்கிரஸ் முயற்சி செய்து வருகின்றன. நானும் முயற்சி செய்கிறேன். ஆனால், எங்கள் அனைவரது காரணங்களும் வெவ்வேறு.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக