புதன், 1 நவம்பர், 2017

கட்டலோனியர்கள் :அறிவு இல்லாமல் வணிகம் இல்லை, வணிகம் இல்லாமல் அறிவு இல்லை!


Ravishankar Ayyakkannu : கட்டலோனியர்கள் வணிகத்தின் வலுவால் மட்டுமில்லாமல் அறிவின் வலுவாலும் உரிமைக் குரல் கொடுக்கிறார்கள். அறிவு இல்லாமல் வணிகம் இல்லை, வணிகம் இல்லாமல் அறிவு இல்லை!
விக்கிப்பீடியாவில் ஒவ்வொரு மொழியிலும் இருக்க வேண்டிய 1000 முக்கியமான கட்டுரைகள் பட்டியல் உண்டு. அதில் உலக அளவில் முதல் இடத்தில் இருப்பது உருசிய மொழி (100 புள்ளிகள்). அடுத்து கட்டலோனிய மொழி (99.90 புள்ளிகள்). அதற்குப் பிறகு தான் சீனம், ஆங்கிலம் எல்லாம் வருகிறது. (இணைப்பு மறுமொழியில்)
அவர்கள் மக்கள் தொகை என்ன தெரியுமா? வெறும் 40 இலட்சம்!
விக்கிமீடியா அறக்கட்டளையில் நாடுகளுக்கு மட்டும் தான் தனி கிளை தொடங்க அனுமதி தருவார்கள். இந்த கட்டலோனியாகாரர்கள் மட்டும் முதன் முறையாக ஒரு மொழி/பகுதிக்கு என்று 2008லேயே தனி கிளை கேட்டு வாங்கி விட்டார்கள்.
அதைப் பெறுவதற்கு 2003 முதல் ஐந்து ஆண்டுகள் உழைத்து ஒரு முன்மாதிரி அமைப்பை உருவாக்கிக் காட்டினார்கள். அவர்களுக்காக அமைப்பு விதிகளையே மாற்றி தனி கிளை தந்தார்கள்.
எதற்குச் சொல்கிறேன் என்றால், தனி நாடு கோரிக்கை என்றால் வெறும் கொடி, துப்பாக்கி, முழக்கம் என்று இல்லாமல் எப்படி சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் தன்னாட்சியை நிறுவி பிறகு இறுதி அடியை எடுத்து வைக்கிறார்கள் என்பதைச் சுட்டத் தான்.
இந்தப் பட்டியலில் தமிழ் 30ஆவது இடம். இந்தியாவில் முதலிடம். மலையாளம் 48ஆம் இடத்திலும் இந்தி 53ஆம் இடத்திலும் இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக