செவ்வாய், 7 நவம்பர், 2017

"உள் இட ஒதுக்கீடு" மாதிகா மக்கள் மீது போலீஸ் வெறியாட்டம் ஒரு பெண் உயிரழப்பு!

Beema Veeran : மாதிகா "உள் இட ஒதுக்கீடு" கோரிக்கை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறை தாக்குதலில் உயிர் பலி : தெலுங்கான மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் மாதிகா மக்களுக்கு "உள் இட ஒதுக்கீடு" வேண்டி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சென்ற 700 க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட மாதிகா மக்களின் மீது போலீஸ் தடியடி நடத்தி வெறியாட்டத்தில் ஈடுபட்டது. இதில் தள்ளு முள்ளு ஏற்பட்டு காவல் துறை தாக்குதலில் திருமதி பாரதி என்ற மாதிகா பெண் உயிரிழந்தார். இந்தியா முழுவதும் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் சனநாயக உரிமை நசுக்கப்படுவதை புரட்சிப்புலிகள் வண்மையாக கண்டிக்கிறோம். தெலுங்கனா முதல்வர் சந்திரசேகர ராவ் உடனே பதவி விலக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக