சனி, 4 நவம்பர், 2017

சிக்கினார் நிர்மலா சீதாராமன்! அறக்கட்டளை ஊழல் .. கூடவே மூன்று அமைச்சர்களும் ... தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மகன் ......

மதவாத எதிர்ப்பு பிரச்சாரம் : வியாபாரத் தொடர்பு, அமித்ஷாவைத் தொடர்ந்து சிக்கினார் நிர்மலா சீதாராமன்!
Image may contain: 2 people, people standingசமீபத்தில்' தி வயர்' இணையதளம் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்தி வரும் நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதாக  செய்தி வெளியிட்டிருந்தது. அமித்ஷா மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், இப்போது மற்றொரு பூதம் வெளி வந்துள்ளது. பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின் மகன் ஷவுர்யா தோவால் நடத்தி வரும் இந்தியா ஃபவுண்டடேஷன் அறக்கட்டளையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இயக்குநராக இருப்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து 'தி வயர்' இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, ''இந்தியா ஃபவுண்டேஷன் அறக்கட்டளை வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் இருந்து ஸ்பான்ஸர் பெறுகிறது. வெளிநாட்டு நிறுவனங்களில் ஸ்பான்ஸர் பெற்று நடத்தப்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சரே இயக்குநராக இருப்பது, விதிமீறல் இல்லையா?. நிர்மலா சீதாராமன் மட்டுமல்ல மேலும் மூன்று அமைச்சர்கள் இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர். வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ஆகியோரும் இந்நிறுவனத்தின் பிற இயக்குநர்கள். பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ராம் மாதவ் வாரணாசியும் இயக்குநராக உள்ளார்'' எனக் கூறப்பட்டுள்ளது.

ஷவுர்யா தோவால் நிறுவனத்துடன் மத்திய அமச்சர்கள் கொண்டுள்ள வியாபாரத் தொடர்பு குறித்து, தி வயர் விளக்கம் கேட்டதாகவும், அமைச்சர்களிடம் இருந்து செய்தி வெளியிடும் வரை எந்த பதிலும் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வருடங்களுக்கு முன், இந்தியா ஃபவுண்டேஷன் அறக்கட்டளைத் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்றுள்ளதோடு, பணப் பரிவர்த்தனையும் கொண்டுள்ள அறக்கட்டளை இது. பாரதிய ஜனதா சட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன், புது டெல்லி ஹேலே சாலையில் உள்ள டோனி அடுக்குமாடிக் குடியிருப்பில் நிர்மலா சீதாராமன் வசித்து வந்தார். 2014-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சரானதால், அரசு பங்களா ஒதுக்கப்பட்டது. தற்போது, இந்த அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்தியா ஃபவுண்டேஷன்
அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களின் போது, இந்தியர்களைச் சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பார். நியூயார்க் பயணத்தின் போது, மேடிசன் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சி, சான்பிரான்ஸிஸ்கோவில் சிலிக்கான்வேலி நிறுவனங்களின் இந்தியத் தலைவர்களுடன்மோடி பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி, பிரான்ஸ் சுற்றுப்பயணம் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை இந்நிறுவனம்தான் ஏற்பாடு செய்துள்ளது.
மத்திய அரசிடமும் பிரதமரிடமும் அஜித் தோவாலுக்குள்ளச் செல்வாக்கை தனக்கு சாதாகமாக ஷவுர்யா தோவால் பயன்படுத்தியுள்ளார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு.
பிரதமரின் தேசிய பாதுகாப்பு செயலர் மகன் நடத்தி வரும் அறக்கட்டளையில் மத்திய அமைச்சர்களே இயக்குநர்களாக இருப்பது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

 In an exclusive article, news website The Wire has alleged that the India Foundation, a think-tank run by National Security Adviser Ajit Doval’s son Shaurya Doval, has “conflict of interest writ large”. First, the India Foundation has some senior ministers of the Narendra Modi government as directors, the article noted. These names include Defence Minister Nirmala Sitharaman, Commerce and Industry Minister Suresh Prabhu, and two Ministers of State – Jayant Sinha of Civil Aviation Ministry and MJ Akbar of External Affairs Ministry. The Wire alleges that thanks to the backing of such heavyweights, the think-tank has seen a “meteoric” rise since 2014 – the year Modi was elected as India’s Prime Minister. Further, besides running the India Foundation, Shourya is a partner at Gemini Financial Services, a financial services firm that helps carry out transactions and capital flows between the OECD and the emerging Asian nations. That raises “the prospect of conflict of interest and lobbying, problems Narendra Modi had promised to banish forever from the corridors of power”, The Wire noted.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக