வியாழன், 30 நவம்பர், 2017

போர் குற்றவாளி நீதிமன்றத்திலேயே விஷம் கொடித்து தற்கொலை ... போஸ்னியா போர் குற்றம்


தினத்தந்தி :Slobodan Praljak, a former Bosnian Croat official who was on trial Wednesday at the International Criminal Tribunal for the former Yugoslavia, has reportedly died after drinking poison. Praljak, 72, was filmed drinking the poison Wednesday.
தி ஹோக்: ஐ.நா. சர்வதேச கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது போர் குற்றவாளி என கூறப்பட்ட முன்னாள் ராணுவ கமாண்டர் நீதிபதி முன்பாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 1990-ம் ஆண்டு போஸ்சினியா -குரோஷியா போரின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டார் கொல்லப்பட்டனர். அமெரிக்கா தலையீட்டால் 1995-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. இதில் யுகோஸ்லாவாகிய ராணுவ கமாண்டராக இருந்த ஸ்லோபோடன் பரால்ஜாக்,72 மீது போர் குற்ற விசாரணை ஐ.நா. சர்வதேச ஐகோர்ட்டில் நடந்து வந்தது.
இதில் 2013ம் ஆண்டு அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் அவர் போர் குற்றவாளி என உறுதியானது. தீர்ப்பை நீதிபதி கேமல் ஆகியூஸ், வாசித்துக்கொண்டிருந்த போது திடீரென ஸ்லோபோடன், தாம் போர்குற்றவாளி அல்ல, தீர்ப்பை ஏற்க முடியாது என கூறி பையில் வைத்திருந்த விஷத்தை எடுத்து நீதிபதி முன்பாக குடித்து மயங்கி விழுந்து இறந்தார்.
பலியான ஸ்லோபோடன் பரால்ஜாக்கிற்கு குரோஷிய பிரதமர் ஆன்ட்ரிஜ் பெலன்கோவிக் இரங்கல் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக