சனி, 25 நவம்பர், 2017

தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் கந்து வட்டி குறித்து முக்கிய முடிவு: ஞானவேல் ராஜா பேட்டி

tamilthehindu :அசோக்குமார் தற்கொலை வழக்கில், இயக்குநர், நடிகர் சசிகுமாருடன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஞானவேல் ராஜா, கந்து வட்டி குறித்து தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
சசிகுமாருடன் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் ஞானவேல்ராஜா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “விசாரணை தொடர்பாக தயாரிப்பாளர் சங்க செயலாளர் என்ற முறையில் விளக்கமளிக்க வந்தேன். அசோக்குமார் மரணம் தொடர்பாக விளக்கமளித்தோம், அடுத்தகட்ட விசாரணைக்கு நாளையும் வரவுள்ளோம்
அசோக்குமாரையும் அவரது குடும்பத்தினையும் தவறாக பேசியதாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

எம்.ஜி.ஆர்.காலத்திலிருந்து பைனான்சியர்கள் உள்ளனர் ஆனால் வசூலிக்கும் முறையில் தான் தவறு உள்ளது.
வருகின்ற 30-ம்தேதி தயாரிப்பாளர் சங்ககூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. அதில் தயாரிப்பாளர்களிடம் கந்து வட்டி தொடர்பாக கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கவுள்ளோம்.” இவ்வாறு ஞானவேல் ராஜா பேசினார்.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக