ஞாயிறு, 5 நவம்பர், 2017

ஆர்.எஸ்.எஸ். கிளையாக மாறிய சிபிஐ!

மின்னம்பலம்: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்பாக சிபிஐ மாறிவிட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
வியாபம் வழக்கில், மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ்சிங் சவுகானுக்கு , சிபிஐ நற்சான்றிதழ் வழங்கியதை விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பாக சிபிஐ மாறிவிட்டது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கமல்நாத், “சிவராஜ்சிங் சவுகானுக்கு எந்த நீதிமன்றமாவது நற்சான்றிதழ் வழங்கியதா? சிபிஐ அவருக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. இதன்மூலம் சிபிஐ, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளை அமைப்பாகத் தன்னை சுருக்கிக் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மேலும், ஊழல் குறித்து விசாரிக்க சிபிஐ-ஐ கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், சிபிஐ தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இதன்மூலம் சிபிஐ ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கிளையாக மாறிவிட்டது நிரூபணம் ஆகியுள்ளது” என்று தெரிவித்தார்.

முன்னதாக, வியாபம் ஊழலில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் பெயர் இடம் பெற்றிருப்பதாகவும், முக்கிய குற்றவாளியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கணினியில் இருந்து அவரது பெயர் அழிக்கப்பட்டு விட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய சிபிஐ, சிறப்பு நீதிமன்றத்தில் அக்.31ம் தேதி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் வியாபம் அதிகாரிகள் 3 பேர் உள்ளிட்ட 490 பேரின் பெயர்கள், குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் உள்ளது. மத்தியப் பிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகானின் பெயர் அதில் இல்லை. இதற்கு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக