புதன், 22 நவம்பர், 2017

குஜராத் தேர்தல் ... ஹர்திக் பட்டேல் காங்கிரசுக்கு ஆதரவு !

குஜராத் சட்டசபை தேர்தல்: ஹர்திக் பட்டேல் காங்கிரசுக்கு ஆதரவுமாலைமலர் :குஜராத் சட்டசபை தேர்தலில் பட்டேல் சமூகத்தின் பதிதார் அனாமத் அண்டோலன் சமிதி அமைப்பை சேர்ந்த ஹர்திக் பட்டேல் காங்கிரசுக்கு தனது ஆதரவை அளித்துள்ளார்.
>
அகமதாபாத்: குஜராத்தில் பட்டேல் சமூகத்தை சேர்ந்த ஹர்திக் பட்டேல் பதிதார் அனாமத் அண்டோலன் சமிதி என்ற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். இந்த சமூகத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு அவர் நடத்திய போராட்டத்தால் பட்டேல் சமூகத்தினர் ஹர்திக் பட்டேலுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள். இதற்கிடையே, குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஹர்திக் பட்டேலின் ஆதரவை பெற்றால் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என அந்த கட்சி கருதியது. காங்கிரஸ் வெற்றி பெற்றால் பட்டேல் சமூகத்தினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு பற்றி இப்போதே அறிவிக்க வேண்டும். பட்டேல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் சீட்டுகள் வழங்கவேண்டும். தனது அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் டிக்கெட் வழங்கவேண்டும் என்ற நிபந்தனைகளை ஹர்திக் பட்டேல் விதித்தார். இதுகுறித்து இரு தரப்பினருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

இந்நிலையில், ஹர்திக் பட்டேல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம். பட்டேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது. தனது தேர்தல் அறிக்கையிலும் இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கிறேன். 

ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளேன். எங்களது கோரிக்கைகளை காங்கிரஸ் கட்சியினர் நிச்சயம் பரிசீலிப்பதாக கூறியுள்ளனர். இத்தனை சீட்டுகள் வேண்டும் என நாங்கள் காங்கிரசிடம் பேசவில்லை. ஆனால், எங்கள் சமூகத்தினரை சேர்ந்த சிலரை தேர்தலில் நிறுத்த வேண்டும் என கோரியுள்ளோம். 

குஜராத்தில் ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க.வினர் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 லட்சம் விலை பேசி வருகின்றனர் என குற்றம் சாட்டி பேசினார்.

குஜராத் தேர்தலில் தங்களுக்கு ஹர்திக் பட்டேல் ஆதரவு தெரிவித்ததை அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் வரவேற்றுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக