தினமலர்: புதுடில்லி: ஜெயலலிதாவின் மகள் எனக் கூறிக் கொள்ளும், 37 வயது பெண், அதை நிரூபிக்க, டி.என்.ஏ., சோதனை நடத்தப்பட வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.அம்ருதா எனப்படும், மஞ்சுளா, 37, என்ற பெண், பெங்களூரில் வசிக்கிறார். மறைந்த, தமிழக முதல்வர், ஜெயலலிதா அக்கா, ஷைலஜாவும், அவர் கணவர், சாரதியும்,தன்னை வளர்த்ததாக அப்பெண் கூறுகிறார்.
; டி.என்.ஏ., சோதனை ஜெயலலிதா மகள் என்ற தகவலை, மார்ச்சில் இறப்பதற்கு முன், தன்னை வளர்த்த சாரதி தெரிவித்ததாக, மஞ்சுளா தெரிவித்து உள்ளார்.தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்கும் வகையில், கல்லறையில் இருந்து ஜெயலலிதாவின் உடலை எடுத்து,டி.என்.ஏ., சோதனை நடத்தும்படி, உச்ச நீதிமன்றத்தில், மஞ்சுளா மனு தாக்கல் செய்துள்ளார்.
உண்மை
அதில், 'ஜெயலலிதாவின் கவுரவத்தை பாதுகாக்கும் நோக்கில், அவரது மகள், மஞ்சுளா என்ற உண்மையை, அவர் குடும்பத்தினர் மறைத்து விட்டனர். 'கடந்த, 1980 ஆக., 4ல், சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஜெயலலிதா வீட்டில், மஞ்சுளா பிறந்தார்' என, கூறப்பட்டு உள்ளது. இந்த மனுவை, உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று, தள்ளுபடி செய்தது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக