வியாழன், 23 நவம்பர், 2017

மோடியின் சிந்தனைக் களஞ்சியத்தில் மூழ்கி முத்தெடுத்த திராவிட "கவி"


Annamalai  : பார்ப்பனீயம் என்பது என்ன ?
அது ஒரு மனப்பான்மை
அது பார்ப்பனராகப் பிறந்தவர்கள் இடம் மட்டுமே இருக்கும் என்று சொல்ல முடியாது.
அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு சொல்லட்டுமா ?
எப்படியாவது யாரைச்சார்ந்தாவது
ஈனப்பட்டாவது மானம் கெட்டு
பிழைப்பதும் அப்படிப் பிழைப்பதை
பெருமையாகக் கருது வதும்
பார்ப்பனீயத்தின் அடையாளங்களில் ஒன்றாகும்.
இங்கிலாந்தின் ஆட்சியில் இந்தியா இருந்தபோது மிலேச்சபாஷையான இங்கிலீஷ் படித்து ஆள்பவர்களின் பக்கத்தில் நின்று பிழைப்பு நடத்தியவர்கள்
ஹிட்லரின் படை முன்னேறுகிறது..இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து தோற்றுவிடும் நம்மை ஜெர்மனி தான் ஆளப்போகிறது என்று செய்திகள் வெளியாகத் தொடங்கியவுடன் அவசர அவசரமாக ஜெர்மனி மொழியை படிக்கத் தொடங்கியதற்குப் பெயர்தான் பார்ப்பனீயம.
திடீரென்று திராவிட இலக்கியம் மோடியின் சிந்தனைக் களஞ்சியத்தில் மூழ்கி முத்தெடுப்பதும் கூட
பார்ப்பனீயம்தான் என்று நான்நினைக்கிறேன்.
நீங்கள் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக