செவ்வாய், 28 நவம்பர், 2017

சத்யம் சினிமா அதிபர் வீட்டில் வருமான வரி சோதனை

வெப்துனியா :கடந்த சில நாட்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சசிகலாவின் ஒட்டுமொத்த சொந்தங்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் வருமான வரித்துறையினர் தங்கள் வேட்டையை தொடங்கியுள்ளனர் இன்று காலை சென்னை பெரம்பூரில் உள்ள சத்யம் S2 சினிமாஸ் தியேட்டர் அதிபர் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சத்யம் சினிமாஸ் குழுமத்திடமிருந்து ஜாஸ் சினிமா நிறுவனத்தை சசிகலா தரப்பினர் வாங்கினர். இந்த பரிமாற்றத்தில் முறைகேடு இருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்தே இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக