வியாழன், 9 நவம்பர், 2017

மதுராந்தகம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்

Chinniah Kasi : மதுராந்தகம், நவ.8- கடந்த சில தினங்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததால் மதுராந்தகம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறிவருகின்றது.காஞ்சிபுரம் மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம். பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டின் கீழ் 922 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் பெரும்பாலான ஏரிகள் கடந்த பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமலும், நீர் வரத்துக் கால்வாய்கள் சீர்செய்யப்படாமலும் உள்ளன. கடந்த சில நாட்டகளாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரி நீர்வரத்து அதிகரித்தது.

இதனால் மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியும் நிரம்பி 694 மில்லியன் கன அடி நீர் நரம்பியுள்ள நிலையில் புதனன்று நிலவரப்படி நூறு கன அடி தண்ணீர் கலங்கல் வழியாக வெளியேறி வருகின்றது.
இருந்த போதிலும் கடந்த இடண்டு தினங்களாக மழை குறைந்துள்ளதால் ஏரிக்கு வரும்நீர்வரத்தும் குறைந்துள்ளது.மதுராந்தகம் ஏரியின் முழு கொள்ளளவான 694 மில்லியன் கன நீர் நிரம்பியுள்ளதால் மதுராந்தகம் மற்றும் அதன் சுற்று வட்டார விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் பொது மக்கள் ஏரியை வந்து பார்வையிட்டு செல்கின்றனர். இதனால் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை ஏரியைக் கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மதுராந்தகம் ஏரி உபரி நீர் செல்லும் கிளியற்று கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை ஏற்கனவே விடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக