திங்கள், 6 நவம்பர், 2017

வைகோ கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்துவிட்டாரா? வைரலாக பரவும் விடியோ!


நக்கீரன் : மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மனைவியும் மகள் மருமகன் ஆகியோர் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்துவிட்டதாக பிரபல மதபோதகர் மோகன் சி லாஸரஸ் தெரிவித்துள்ளார். மதபிரசங்கம் ஒன்றில் அவர் இதுதொடர்பாக பேசிய பேச்சு விடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது. அந்த உரையில் வைகோவின் மனைவி, மகள் உள்ளிட்டோர் குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்துவிட்டனர். அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதால் அவர் சொல்ல தயங்குகிறார். ஆனால் காலை மாலை இருவேளையும் பைபிள் வாசிப்பதாகவும், ஜெபிப்பது எப்படி என்று தன்னிடம் கேட்டுத் தெரிந்துகொண்டதாகவும் கூறினார். இதுதவிர, வைகோவின் மகளும் மருமகனும் அமெரிக்காவில் இருப்பதாகவும், சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மதத்துக்கு ஊழியம் செய்வதாகவும் மோகன் சி லாசரஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விடியோ வைரலாக பரவி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக