வெள்ளி, 10 நவம்பர், 2017

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் ஐ டி தொழிலாளர்களுக்கு யூனியன்

நிறுவனங்களின் அராஜகம்Prasanna VKo GoodReturns : இந்தியாவில் மற்ற அனைத்துத் துறைகளை விடவும் ஐடி துறையில் ஊழியர்கள் அதிகமான சம்பளம் வழங்கப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், இவர்களது வேலைக்கான உத்திரவாதம் என்பது சற்று குறைவாகவே உள்ளது.
இதனைத் தடுக்கவே தமிழகத்தைத் தொடர்ந்து தற்போது கர்நாடக அரசும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது."ஐடி நிறுவனங்கள் நினைத்தால், எப்போது வேண்டுமானாலும் ஏதாவது காரணத்தைக் கூறி பெரிய அதிகாரிகள் முதல் ஆரம்பக்கட்ட ஊழியர்கள் வரையில் எவ்விதமான ...""நிறுவனங்களின் அராஜகம்" நிறுவனங்களின் அராஜகம் ஐடி நிறுவனங்கள் நினைத்தால், எப்போது வேண்டுமானாலும் ஏதாவது காரணத்தைக் கூறி பெரிய அதிகாரிகள் முதல் ஆரம்பக்கட்ட ஊழியர்கள் வரையில் எவ்விதமான தடையுமின்றி வேலையைவிட்டு அனுப்பும் நிலை நிலவி வருகிறது.

யூனியன்

இத்தகைய நிலைக்குக் காரணம் ஐடி ஊழியர்களுக்காகப் போராடவோ அல்லது குரல் கொடுக்கவோ இந்தியாவில் ஒரு அமைப்போ அல்லது யூனியன்களோ இல்லாமல் இருப்பது தான். இதனை ஆரம்பம் முதலே ஐடி நிறுவனங்கள் சரியான முறையில் எதிர்ப்புகள் இருக்கக் கூடாது எனக் கட்டமைத்துக் கொண்டு வந்தது.

கர்நாடகா

தமிழ்நாட்டைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் தொழிலாளர் கமிஷன், KITU என்ற கர்நாடக மாநில IT/ITES ஊழியர்கள் யூனியன்-ஐ உருவாக்கியுள்ளது. இது டிரேட் யூனியன் சட்டம் 1926 மற்றும் கர்நாடக டிரேட் யூனியன் விதிமுறை 1958 சட்டத்தின் கீழ் உட்பட்டுத் துவங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தலைவர்

தற்போது 250 உறுப்பினர்கள் கொண்ட இந்த அமைப்பிற்கு வினித் வகில் பொதுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இவர் கூறுகையில், ஐடி ஊழியர்களாகப் போராடவும், குரல் கொடுக்கவும் மாநிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் அமைப்பு. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்று வகில் கூறினார்.

ஊழியர்கள் பணிநீக்கம்

சில மாதங்களுக்கு முன்பு நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் இந்தியாவில் முழுவதும் உள்ள தனது அலுவலகங்களிலும் 10,000க்கும் அதிகமாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துச் சில முக்கிய அதிகாரிகளையும் பணியைவிட்டு நீக்கியது.

தமிழ்நாடு

இந்தப் பணிநீக்கம் தமிழ்நாட்டில் அதிகமாக இருந்த காரணத்தால் சென்னையில் இருக்கும் முன்னணி ஐடி நிறுவனங்களின் ஊழியர்கள் கைகோர்த்து முதல் முறையாக இத்துறை நிறுவனங்களுக்கு எதிராரகப் போராட்டத்தை நடத்தினர்.

வழக்கு

போராட்டத்தின் எதிரொலியாக அப்போது பணிநீக்கம் அறிவித்த பல ஐடி நிறுவனங்கள் திட்டத்தைக் கைவிட்டது மட்டும் அல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்ட சில ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர்.

கோரிக்கை

அதன்பின் ஐடி ஊழியர்கள் தமிழ்நாடு அரசிடம் ஐடித்துறையில் ஊழியர்களின் காரணமற்ற பணிநீக்கத்தை எதிர்க்க யூனியன் அமைப்பதற்காக அனுமதி வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தனர்

உடனடி அனுமதி..

கோரிக்கையை ஏற்ற தமிழ்நாடு அரசு சில நாட்களிலேயே அப்போதைய தொழிற்துறை அமைச்சர் ஐடி நிறுவனங்களில் யூனியன் அமைக்க எவ்விதமான தடையும் இல்லை என அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலமும் யூனியன் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஐடி ஊழியர்கள்

பெங்களூரில் மட்டும் சுமார் 15 லட்ச ஐடி மற்றும் ஐடி துறை சார்ந்த ஊழியர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் இதன் எண்ணிக்கை 40 லட்சத்தைத் தாண்டுகிறது.
இந்தியாவில் தொழில்நுட்ப சேவை மற்றும் அதற்கான சந்தை அதிகரித்து வரும் நிலையில், ஐடி நிறுவனங்கள் பல்வேறு இக்கட்டான வர்த்தகச் சூழ்நிலையைச் சந்திக்கிறது. இதனால் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து தனது வருவாய் அளவீடுகளைக் காத்துக்கொள்கிறது.

சேவை துறை

பொதுவாக யூனியன் அமைப்புகள் உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டுமே இருக்கும். இதின் மூலம் இத்துறையில் இருக்கும் ஊழியர்களின் சம்பள அளவீடுகள், வேலைவாய்ப்பு உத்திரவாதம் மற்றும் பிற கோரிக்கைகளை நிறைவேற்றும் ஒரு வாயிலாக இருந்தது.
தற்போது ஐடி துறையில் யூனியன் அமைக்கப்பட்டதன் மூலம் இனி சேவை துறையில் இருக்கும் பிற துறையில் யூனியன் அமைக்கப்படும் என நம்பப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக