சனி, 4 நவம்பர், 2017

"விழித்திரு:- மீரா கதிரவன் ,,, சிறு பட தயாரிப்பாளர்கள் படும் பாடு ...

கருப்பு கருணா :ஒவ்வொரு இயக்குநருக்கும் அவரது படம் வெளியாவதென்பது பிரசவ வாதைதான். அதிலும் சிறு படத்தயாரிப்பாளர் படமென்றால் கொலை வேதனைதான். ஐந்து ஆண்டுகளாக உயிர்சிந்தி உருவாக்கிய படத்தை வெளியிட Meera Kathiravan படம் பாட்டை கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஒரு படைப்பாளியை இப்படி அலைகழிக்கிற சமூகம் நிச்சயம் உருப்பட வாய்ப்பில்லை. உங்கள் தோள்களை பற்றி நிற்போம் மீரா... கடந்த இரண்டு நாட்களாக நொடி உறக்கம் இல்லை.தற்போதும் ஜெமினி லேப் வாசலில் என் ரத்தம் உறிஞ்சப்படுவது தெரிந்தும் தடுக்க முடியாமல் தாங்கி கொண்டிருக்கிறேன் ,  துரோகத்தின் வல்லமை யால் முழுவதும் சாகடிக்கப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன் .ஆனாலும் என் படத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது.

முழுவதுமாக கொல்லப்பட்டிருக்கிறேன். நான் மீண்டும் உயிர்ப்பித்து வருவது நீங்கள் அளிக்கப் போகும் ஆதரவில் இருக்கிறது.
நண்பர்களும் மக்களும் ஊடகத்துறையினரும் எங்களைக் கைவிட மாட்டீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.
சிரமங்களுக்கு மன்னிக்கவும்...விழித்திரு திரையரங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது...ஆதரியுங்கள்..
Meera Kathiravan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக