சனி, 11 நவம்பர், 2017

சசிகலாவால் எடுக்கப்பட்ட ஜெ., சிகிச்சை வீடியோ, விசாரணை ஆணையத்திடம் வழங்கப்படும்! - தினகரன் பேட்டி

விகடன் :டி.டி.வி தினகரன், திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, “நான் காந்தி பேரனும் இல்லை; கோட்சேவின் வழித்தோன்றலும் இல்லை. கற்களை வைரமாக நினைத்தால், நான் பொறுப்பல்ல. எனது வீட்டில் பாதாள அறையும் இல்லை. வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததற்கான ஆதாரங்களும் இல்லை. வெறும் 3 மணி நேரத்தில் முடியவேண்டிய சோதனை, 3 நாள்களாகத் தொடர்கிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, சசிகலாவால் எடுக்கப்பட்ட வீடியோ, விசாரணை ஆணையத்திடம் வழங்கப்படும். வீடியோவை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் அது ஒப்படைக்கப்படும்” என்றார்.

ஜெயலலிதா மரணம்குறித்து விசாரிக்க, தமிழ்நாடு அரசு அமைத்த விசாரணை ஆணையம் விசாரணையைத் தொடர்ந்துவரும் நிலையில், ஜெயலலிதா சிகிச்சைபெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ, ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும்'' என்று டி.டி.வி தினகரன் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக