வெள்ளி, 24 நவம்பர், 2017

இந்திய பீசாக்களில் சீசுக்கு பதிலாக கலப்பட .... அதிர்ச்சி!



Global junk food என்ற டாக்குமெண்டரி பார்த்தேன். இந்தியா குறித்து வரும் தகவல்கள் அதிர்ச்சி அளித்தன.
இந்திய டாமினோஸில் 49 ரூபாய்க்கு பீட்சா விற்பதை காட்டினார்கள். 49 ரூபாய்க்கு எப்படி பீட்சா உற்பத்தி செய்து, விற்றூ லாபம் சம்பாதிக்க முடியும் என டாக்குமெண்டரி எடுத்தவருக்கு புரியவில்லை. அதன்பின் டாமினோஸில் வேலை செய்யும் சமையல்காரர் ஒருவரை திருட்டுதனமாக பேட்டி எடுக்கிறார். அவர் பீட்சாவில் சீஸே போடமாட்டோம். மாட்சரில்லா சீஸ் என சொன்னாலும் அதில் இருப்பது மேயோ, மற்றும் சீஸ் பிளேவர் தான் என்றார்.
நம்பாமல் லேபில் கொடுத்து ஆய்வு செய்ய, அதில் சீஸே இல்லை என ஆய்வு முடிவு வந்தது. ஆண்டு 2016. இப்ப என்ன நிலவரமோ தெரியவில்லை...இப்படி பொட்டிகடையில் செய்யும் கலப்படத்தை பன்னாட்டு கம்பனியும் செய்யிம் கொடுமையை என்னவென்பது?
இந்தியாவில் துரித உணவுகங்களில் கலோரி விவரங்களை அச்சிட வேண்டியதில்லை என்றும் சொன்னார்கள்...இந்திய மெக்டானல்ட்ஸ் குழந்தைகளை குறிவைத்து விளம்பரம் செய்வதையும், அதை இந்திய சட்டம் தடுப்பதில்லை என்பதையும் காட்டினார்கள்.
ஒரு விளம்பரத்தில் 10-12 வயது பெண் அதே வயது 'பாய்பிரண்டிடம்' மெக்டானல்ட்ஸ் ஆலு டிக்கி வாங்கி தர சொல்லி கேட்க, அவனும் வாங்கி தந்து முத்தத்தை பரிசாக பெறுகிறான். (முதல் கமெண்டில் விளம்பர விடியோ காண்க). இம்மாதிரி குழந்தைகளை ஐரோப்பாவில் மெக்டானல்ட்ஸ் விளம்பரத்தில் பயன்படுத்தினால் களிதான்.
கலாசார காவலர்கள் இதை எல்லாம் கண்டுக்க மாட்டார்களா?
இந்தியாவில் கலோரிகள் விவரத்தை துரித உணவு கம்பனிகள் வெளியிடும் அவசியமும் இல்லையாம். மேலைநாடுகளில் இது கட்டாயம். இந்திய மெக்டானல்ட்ஸ், டாமினோஸ் உணவுகளில் ஐரோபாவில் இருக்கும் அதே வெரைட்டிகளை விட மும்மடங்கு சர்க்கரை, உப்பு எல்லாமே அதிகம்.
- social media

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக