வியாழன், 2 நவம்பர், 2017

ஜிம்"மில் உடற்பயிற்சி... தயாராகும் மு.க.ஸ்டாலின்.. youtube

mayura-akilan. Oneindia Tamil சென்னை: எதிர்கட்சித்தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
65 வயதைக் கடந்த மு.க.ஸ்டாலின் இன்றைக்கும் இளமையோடு இருக்கக் காரணம், அவரது உணவுக்கட்டுப்பாடு கூடவே உடற்பயிற்சியும்தானாம். கடந்த சில ஆண்டுகளாக யோகா மற்றும் வாக்கிங் மேற்கொண்டு வரும் ஸ்டாலின் இளமையான தோற்றத்துடன் இருக்கிறார். வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் ஸ்டாலினை பார்த்தவர்கள் கடந்த ஆண்டு நமக்கு நாமே பயணத்தின் போது மாடர்ன் உடையில் பார்த்தார்கள்.

நமக்கு நாமே பயணத்திற்குப் பிறகு தோற்றம், உடை விஷயத்திலும் மு.க.ஸ்டாலின் தனக்கென சில பாணிகளை கடைபிடித்து வருகிறார். உணவு விஷயத்தில் அதிக கட்டுப்பாட்டுடன் இருக்கிறார் என்கின்றனர் அவருடன் இருப்பவர்கள். ஜிம் மில் உடற்பயிற்சி... தயாராகும் மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் வீடியோ < தமிழகம் முழுவதும் எழுச்சி பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்த ஸ்டாலின், தனது தோற்றத்தை வலுவாக்க உடற்பயிற்சியிலும் ஈடுபட்டார். அந்த வீடியோ கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஸ்டாலின் உடல்நலம் பற்றி பல நேரங்களில் வதந்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அப்படி எல்லாம் எதுவுமில்லை. இதுதான் உண்மை என்று தொண்டர்களுக்கும், வதந்தி பரப்பியவர்களுக்கும் சொல்லாமல் சொல்லியுள்ளார் ஸ்டாலின்.
வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை மட்டுமல்ல... உடல் வலிமையும் அரசியல்வாதிக்கு அவசியமானதுதான் என்று உணர்த்தியுள்ளார் ஸ்டாலின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக