வெள்ளி, 10 நவம்பர், 2017

சுப்பிரமணியன் சாமி சசிகலா தினகரன் அணிக்காக கண்ணீர்!


மாலைமலர் :ஆலந்தூர், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஜெயா டி.வி. உள்பட சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது. இவ்வாறு ஒருதலைப்பட்சமாக சோதனை நடத்தினால் பல சந்தேகங்கள் வரும். அதனால் டெல்லியில் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இதுபற்றி நான் விசாரிக்க உள்ளேன். மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக நடப்பதாக தெரியக்கூடாது. எந்த பக்கத்திலும், எங்கு ஊழல் நடந்தாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். கருணாநிதியை பிரதமர் சந்தித்தது, அரசியல் நாகரிகத்துடன் நடந்தது.
உடல்நலக்குறைவுடன் யார் இருந்தாலும் அவர்களை சந்திப்பது வழக்கம். தமிழகத்தில்தான் எதிர்க்கட்சிகள் திருமணங்களில் பங்கேற்பது இல்லை. சினிமா கலாசாரம்தான் இதற்கு காரணம். மகாபாரத காலத்திலும் துரியோதனன் படையில் சிலர் இறந்துபோனால் பாண்டவர்கள் வந்து நிற்பார்கள். தி.மு.க.வுடன், பாரதீய ஜனதா கூட்டணி வராது. ஒருமுறை நடந்த தவறு இனி நடக்காது. இரட்டை இலை சின்னம் சசிகலா தலைமையிலான அணிக்குத்தான் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக