வெள்ளி, 24 நவம்பர், 2017

வேலூர் மகா லக்ஷ்மி கைது ! நீதிபதி கிருபாகரனின் வஞ்சம் ! முகநூல் பதிவுக்கு ...

Kennedi M G : ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பல நாள் போராட்டம் நடத்தியும் ஊழியர்களை சரிவர அழைத்து பேசாத அரசை கண்டிக்காமல் மாலைக்குள் அனைவரும் பணிக்கு திரும்பாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊழியர்களை மட்டும் மிரட்டி உத்தரவிட்ட நீதிபதி கிருபாகரன் அவர்களை கண்டித்து யாரோ பதிவிட்ட ஒரு முகநூல் பதிவை பதிவரின் பெயரை போட்டு தனது பக்கத்தில் பதிவு செய்த வேலூர் Maha lakshmi என்ற சாதாரண குடும்ப பெண்ணை ஜாமீனில் வரமுடியாத பிரிவின் கீழ் கைது செய்த காவல்துறையையும் தமிழகத்தில் நடக்கிற எத்தனையோ அநியாயங்கள் கோர்ட்டில் வழக்காக நிலுவையில் இருக்கும்போது அதிலெல்லாம் காட்டாத அக்கரையை இந்த பெண்ணை கைது செய்யும் விசயத்தில் காட்டிய நீதிபதி கிருபாகரன் அவர்களை கண்டிக்கிறோம்


காமராஜரை காந்தியை பெரியாரை விமர்சிக்கும் எத்தனையோ மனிதர்கள் இதே முகநூலில் இருக்கிறார்கள் அவர்கள் ஒருவேளை இருந்திருந்தால் உங்களை போல வன்மம் கொண்டிருக்க மாட்டார்கள் சுயபரிசோதனைதான் செய்திருப்பார்கள்
உங்களை போல ஒருமாதமாக வலைவீசி தேடியிருக்க மாட்டார்கள்

இந்த எனது பதிவிற்க்காக நீங்கள் என்னை தேடுவதாக இருந்தால் ரொம்ப சிரமபட வேண்டாம் கமெண்டில் அட்ரஸ் போடுங்க நானே ஆஜர் ஆகிறேன் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக