செவ்வாய், 28 நவம்பர், 2017

ஆர் கே நகர் இடைதேர்தலில் கோகுல இந்திரா மதுசூதனனோடு மோதுகிறார்?

வெப்துனியா: ஆர்.கே.நகர் தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக, தினகரன் அணி, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்திய வேட்பாளரையே நிறுத்த திட்டமிட்டுள்ளது. ;அந்த வகையில் அதிமுகவும் மதுசூதனனை வேட்பாளராக அறிவிக்கும் என்றூ எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன்னர் மதுசூதனன், ஆர்.கே.நகரில் போட்டியிட விருப்பமனுவை பூர்த்தி செய்து அதிமுக தலைமை அலுவலகத்தில் சமர்பித்தார்.இந்த நிலையில் மதுசூதனனை எதிர்த்து வேறு யாரும் விருப்பமனு தரமாட்டார்கள் என்று எண்ணிய நிலையில் திடீரென முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விருப்பமனுவை பெற்று சென்றுள்ளதாகவும், அவர் இன்னும் சிலமணி நேரங்களில் மனுவை சமர்ப்பிப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், தென்சென்னை அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஆகியோரும் விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதனால் மதுசூதனனுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக