சனி, 18 நவம்பர், 2017

ஜெ.,அறையில் சோதனை இல்லை போயசில் 4 மணி நேர சோதனை நிறைவு

தினமலர்: சென்னை: ஜெ., இல்லத்தில் 4 மணி நேரம் நீடித்த சோதனை அதிகாலை 2 மணியளவில் நிறைவு பெற்றது. ஜெ., அறையில் சோதனை நடத்த, சசிகலா தரப்பினர் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. போயஸ் கார்டனில் ஜெ., வாழ்ந்த வேதா இல்லத்தில் நேற்றிரவு(நவ.,17), வருமான வரித்துறையினர், அதிரடியாக சோதனை நடத்தினர். ஜெ., வீட்டில் சோதனை நடக்கும் தகவல் தெரிந்ததும், இரவு, 10:30 மணிக்கு, விவேக், அலறியடித்து அங்கு ஓடி வந்தார். நான்கு மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. அதிகாலை சுமார் 2 மணியளவில் சோதனை நிறைவு பெற்றது. இந்நிலையில், ஜெ., அறையில் சோதனை நடத்த அனுமதிக்கவில்லை என ஜெயா டிவி சி.இ.ஓ., விவேக் தெரிவித்தார். சோதனைக்கு பின் அவர் தெரிவித்ததாவது: ஜெயலலலிதா வாழ்ந்த வீடு கோவில் போன்றது. இங்கு சோதனை நடத்தியது வேதனை அளிக்கிறது. ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த நாங்கள் அனுமதிக்கவில்லை. சோதனைகள் சில கடிதங்கள், 2 பென் டிரைவ், ஒரு லேப்டாப்பை அதிகாரிகள் எடுத்து சென்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக