செவ்வாய், 10 அக்டோபர், 2017

பாஜக ஒரு மன்னார் அன் கம்பனி ... அமித் ஷா + மோடி மற்றும் RSS கமிஷன் ஏஜெண்டுகள் ..

மதவாத எதிர்ப்பு பிரச்சாரம்: மன்னார் அண்ட் கம்பெனியும் மேக்சிமம்  கவர்னன்சும்
அமித் ஷா – பாரதிய ஜனதா தலைவர். பிரதமர் மோடியின் வலது கரம்.
ஜே ஷா – அமித் ஷாவின் மகன்.
இவர் டெம்பிள் என்டர்பிரைஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை பதிவு செய்திருக்கிறார்.
இந்தக் கம்பெனி, மார்ச் 2013 கணக்கின்படி 6230 ரூபாய் நஷ்டம் அடைந்தது. மார்ச் 2014 கணக்கின் படி 1724 ரூபாய் நஷ்டம் அடைந்தது. 2013-14இல் இந்தக் கம்பெனிக்கு அசையாச் சொத்துகள் ஏதும் இல்லை. கையிருப்போ, ஸ்டாக்கோ ஏதும் இல்லை.
சுண்டல், சோயா பீன், கொத்தமல்லி, அரிசி, கோதுமை, சோளம் போன்ற உணவுப் பொருள்களை ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்வதுதான் அந்தக் கம்பெனியின் வேலையாம்.
(இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட்... அதாவது ஏற்றுமதி இறக்குமதி... மன்னார் அண்ட் கம்பெனி யாருக்கெல்லாம் ஞாபகம் வருது?)
2014-15இல் இந்தக் கம்பெனி 50 ஆயிரம் ரூபாய் புழக்கம் காண்கிறது.
அதற்குப் பிறகு நடந்ததுதான் ஆச்சரியம்.
2015-16இல் 80.5 கோடி ரூபாய் டர்ன்ஓவர் காட்டுகிறது.
2013-14இல் 6230 ரூபாய் நஷ்டம் காட்டி, அதில் 5796 ரூபாய் வருமான வரி திருப்பி வாங்கிய கம்பெனி...

ஒரே வருடத்தில் 80 கோடி ரூபாய் டர்ன் ஓவர் காட்டுகிறது.
2013-14ல் இவ்வளவு சிறிய கம்பெனிக்கு KIFS பினான்சியல் சர்வீசஸ் என்ற நிதி நிறுவனம் 15.78 கோடி ரூபாய் கடன் தருகிறதாம்! விந்தை என்னவென்றால், அந்த ஆண்டில் KIFS நிறுவனத்தின் வருமானமே 7 கோடிதானாம்!
அடுத்த வருடம் இன்னொரு ஆச்சரியம் — வியாபாரம் சரியாக இல்லாததால் ஜே ஷாவின் கம்பெனி தன் தொழிலை நிறுத்தி விடுகிறது!
50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரே வருடத்தில் 80 கோடி ரூபாய்க்கு உயர்ந்த வியாபாரம் நஷ்டமாம்!
இந்த விஷயம் வயர் டாட் இன் என்ற வலைதளத்தில் வெளியானதும் ஜே ஷாவுக்காக முதலில் துடித்துக்கொண்டு வந்தவர் பியுஷ் கோயல். மத்திய அமைச்சர்.
ஜே ஷா நூறு கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்குப் போடுவார் என்று அவசர அவசரமாக கொதிக்கிறார் அமைச்சர் பியுஷ் கோயல்.
ஒரு தனியார் நிறுவனம் குறித்த கேள்விக்கு மைய அமைச்சர் ஏன் இவ்வளவு துடிக்க வேண்டும் என்ற கேள்வி நேற்று முதல் ஒலித்துக் கொண்டிருக்கிறது சமூக ஊடகங்களில்.
இந்த விவகாரம் வெளியானது 6ஆம் தேதி.
இந்த விஷயத்தில் மைய அரசின் கூடுதல் வழக்குரைஞர் துஷார் மேத்தா ஜே ஷாவுக்காக வாதாடுவார் என்று மைய அரசு அனுமதி அளித்திருக்கிறது!
அதுவும் எப்போது? விவகாரம் வெளியான 6ஆம் தேதியே அரசு அனுமதி அளித்து விட்டதாம்!
இதுதான் மேக்சிமம் கவர்னன்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக