சனி, 14 அக்டோபர், 2017

“பதினொரு மாத பெண்குழந்தை இரண்டு மணி நேரம் பாலியல் வன்புணர்வுக்கு...

வெளிப்படையாய் பேசித்தான் ஆக வேண்டும். கலவியியல் ஆபாசம் என ஒதுக்கி வைப்பது தான் பல பாலியல் வன்புணர்வாளர்களை உருவாக்குறது. இவற்றை எதிர்த்து இன்று நாம் பேசவில்லை எனில், நாளை உன் வீட்டு பச்சிளம் குழந்தையும் இந்த செய்தியில் இடம்பெற்றிருக்கும் 11 மாத பெண் குழந்தையைப்போல வன்புணர்வுக்கு ஆளாகும். இது பெண் இனத்துக்கே ஒரு கடும் எச்சரிக்கை.
Lulu Deva Jamla  :  “பதினொரு மாத பெண்குழந்தை இரண்டு மணி நேரம் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான கொடூரம்” செய்தி
முகு:- இந்த பதிவுக்கு தயவு செய்து கோப ரியாக்‌ஷன் குடுக்காதீங்க. அப்டி குடுத்தா அந்த செய்தியை இல்ல, இந்த பதிவை எதிர்க்கிறீங்கன்னு அர்த்தம். நிறைய கோப ரியாக்‌ஷன் கிடைக்கும் பதிவுகள் ஃபாலோவர்ஸ் ஹோம் பேஜ்களில் மேலே தெரிவதில்லை.
*பாலியல் அடிமைத்தனம்*
//பெண்ணியம் பேசுறோம் ங்கிற பேர்ல ஆபாசத்தை கடை விரிக்கிற முண்டங்கள் தத்தமது கணவர்கள் கூட இருக்கதை எல்லாம் வரி விடாம எழுதுதுங்க.. இப்படி முகநூலில் வரி வரி கவிதையாக அதை எழுதுவதற்கு பதில் அப்படியான பெண்கள் அவர்களின் உற்றார் உறவினர் பெற்ற பிள்ளைகள் முன்னாடி ஸீன் பை ஸீனா படுக்கையறை காட்சிகளை விவரிச்சு சொல்லுங்களேன். குறைந்த பட்ச நாகரீகம் கூட தெரியாத இப்படியான டேஷ் களை பார்த்தாலே எரிச்சளாகுகிறது...! பெண்ணியம் என்பது ஆபாசத்தை கடை விரிச்சு காட்டுவதில் இல்லை; அது பெண்களை சரியாக புரிந்து மதிப்பதில் இருக்கிறது என்பது ஜொள்ளுக்காக எழுதும் இந்த முண்டங்களுக்கு எப்போதும் புரியாது! அதுக்கும் நாலு ஈனப் பயலுக போயி வாவ், ஆஸம் டோலி, முற்போக்கு கருத்து னு ஜொள்ளு விடுறானுங்க...//
இப்டி ஒரு பதிவு இங்க சுத்திகிட்டு இருக்கிறத பார்த்தேன்... அதுக்கு நான் குடுத்த பதில் இது தான்:-

“அதானே! அதுங்க பேசுற பெண்ணிய ஆபாசத்தை கூட சகிச்சுக்கலாம். ஆனா அதை போய் ஆசம் டோலின்னு ஒவ்வொருத்தன்/ஒவ்வொருத்தி புகழ்ந்து தள்ளுறத தான் நம்மளால சகிச்சுக்கவே முடியல டோலர். கருமங்க எங்கயிருந்து தான் இம்புட்டு ஃபாலோவர்ஸ் புடிக்குதுங்களோ தெரியல. 12,000+ பேரு இவளுகள் கிட்ட ஜொள்ளு விடுறத பார்த்தாவே கடுப்பாவுது. 😒😒😒 அதான் நான் அந்த மாதிரி ஆபாச பெண்ணியவாதிகளை எல்லாம் பார்த்த உடனே ப்ளாக் பண்ணிர்ரது. 😁😁😁 நீயும் அடி ஒரு ப்ளாக்க! என்ன மயித்துக்கு அவளுக பதிவை எல்லாம் நாம மனசுக்குள்ள ரசிச்சிகிட்டு இப்டி கடுப்பு பதிவு போடணும். 🤣🤣🤣
காமெடியா தான் அந்த பதிவில பதில் குடுத்திருக்கேன்னாலும் சீரியசா யோசிச்சு பார்த்தா எனக்கு ஒரு விஷயம் தோணுது. அதாவது பெண் காமம், கலவியியல் குறித்து பொதுவெளியில் பேசினாவே அவளை தனிமனித தாக்குதல் நடத்தி பேச விடாம பண்ணிரணும் என்னும் ஆணாதிக்க வக்கிர மனநிலை. இதை வெளிப்படையா பாலியல் சுதந்திரத்தை ஆதரிக்கும் பெண்ணியவாதிகளை தனிப்பட்ட முறையில் பொறாமை காரணமாய் பிடிக்காமல் இருக்கும் பெண்களும் ஆதரிக்கும் போது தான் நமக்கு ஆதங்கம் தோன்றுகிறது.
கருத்தியல் ரீதியாய் ஒரு பெண்ணை எதிர்கொள்ள இயலாத ஆண்கள் தூக்கும் ஆயுதமே இந்த தனிமனித தாக்குதல்கள். அதில் வெற்றிபெற அவர்கள் உபயோகிக்கும் யுக்தி பிரித்தாளும் சூழ்ச்சி. பெண்ணை இன்னொரு பெண்ணை வைத்தே தாக்க செய்வது. இந்த குள்ள நரித்தனத்தை புரிந்து கொள்ளாமல் பிதற்றும் சக பெண்களை பார்த்தால் பரிதாபம் தோன்றுகிறது.
பெண்ணினத்தை பாலியல் ரீதியாய் அடிமைப்படுத்தி மட்டுமே காரியம் சாதித்து கொண்டிருக்கும் ஆணாதிக்க சமூகத்தை தலையில் குட்டி, பெண்ணுணர்வுகளை புரிய செய்தால் மட்டுமே நமக்கு விடிவுகாலம் பெண்ணே. அதற்கு இவ்வளவு வெளிப்படையாய் பேசித்தான் ஆக வேண்டும். கலவியியல் ஆபாசம் என ஒதுக்கி வைப்பது தான் பல பாலியல் வன்புணர்வாளர்களை உருவாக்குறது. இவற்றை எதிர்த்து இன்று நாம் பேசவில்லை எனில், நாளை உன் வீட்டு பச்சிளம் குழந்தையும் இந்த செய்தியில் இடம்பெற்றிருக்கும் 11 மாத பெண் குழந்தையைப்போல வன்புணர்வுக்கு ஆளாகும். இது பெண் இனத்துக்கே ஒரு கடும் எச்சரிக்கை.
பிகு:- ஆனால் இத்தனை தாக்குதல்களையும் பொருட்படுத்தாமல், தடைகளை தாண்டி, அடித்து நொறுக்கி செல்லும் பெண்களே வெற்றியாளர்கள்!

நான் வெற்றியாளர்களுள் ஒருத்தி. என்னோட சவால் இந்த கேனை கூதிகளுக்கு... நீ உன் வீட்டு பெண்களையும் உடன் வைத்துக்கொண்டு என் வீட்டு கதைகளை கேட்க தயாரெனில், நானும் என் படுக்கையறை காட்சிகளை விவரிக்க தயார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக